கால்வலி சொல்லும் அறிகுறிகள் என்னென்ன? - KALVISEITHI | கல்விச்செய்தி

Friday 20 December 2019

கால்வலி சொல்லும் அறிகுறிகள் என்னென்ன?

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

பொதுவாக கால் வலி என்பது சில குறைபாடுகளின் அறிகுறியாக இருக்க வாய்ப்புண்டு. மூட்டுத் தேய்மானம், நரம்பு கோளாறு, தசை நார் கிழிசல் ஆகியவற்றில் அறிகுறியாக இருக்கலாம். நாள் முழுவதும் ஒட்டுமொத்த உடல் பாரத்தையும் தாங்கி நிற்கும் கால்களுக்கு ஓய்வு என்பது உட்காரும் போதும், உறங்கும் போதும் மட்டும் தான் கிடைக்கும்.

நாள் முழுவதும் ஒட்டுமொத்த உடல் பாரத்தையும் தாங்கி நிற்கும் கால்களுக்கு ஓய்வு என்பது உட்காரும் போதும், உறங்கும் போதும் மட்டும் தான் கிடைக்கும். அதிலும் ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருந்தால், பிரச்னை இல்லை.

பொதுவாக கால் வலி என்பது சில குறைபாடுகளின் அறிகுறியாக இருக்க வாய்ப்புண்டு. மூட்டுத் தேய்மானம், நரம்பு கோளாறு, தசை நார் கிழிசல் ஆகியவற்றில் அறிகுறியாக இருக்கலாம்.
உடல் பருமன் அளவுக்கு அதிகமாகும் போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. அதுவும் உடல் பருமனுடன் இருப்பவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால், உடலைத் தாக்கும் கால்களின் நிலைமை மிகவும் மோசமாகும்.

அதில் ஆரம்பத்தில் கால்கள் வலிக்க ஆரம்பித்து, பின் நாளாக ஆக தாங்க முடியாத வலியை உண்டாக்கும். கால்கள் வலிப்பதற்கு உடல் பருமன் மட்டும் காரணமல்ல, வேறுசில காரணங்களும் உள்ளன. சில வகையான கால் வலிகள் எரிச்சலூட்டி, மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும். இன்னும் சில வகை கால் வலிகள் மிகுந்த வலியை உண்டாக்கும்.

இந்த கால் வலிகளுக்கு தீர்வே கிடையாதா என்று பலர் புலம்புவார்கள். ஒரு நல்ல செய்தி என்னவென்றால், கால் வலிகளுக்கு இயற்கையாகவே எளிதில் தீர்வு காணலாம். இக்கட்டுரையில் கால் வலிக்கான சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பின்பற்றினால் நிச்சயம் கால் வலியில் இருந்து விடுபடலாம்.

கால் வலிக்கான காரணங்கள்

எலும்பு மூட்டு இணைப்புக்களில் காயங்கள், தசை அல்லது தசைநார்களில் கிழிசல், இரத்த உறைவு, மோசமான இரத்த ஓட்டம், வெரிகோஸ் வெயின் அல்லது சுருள் சிரை நரம்பு, எலும்பு தேய்மானம், கால் வலிக்கான அறிகுறிகள், கால் வலிக்கான அறிகுறிகள், கால்கள் மற்றும் முதுகுத்தண்டின் கீழ் பகுதியில் உணர்வின்மை, கால் தசை பிடிப்புக்கள், சர்க்கரை நோய் காரணமாக நரம்பு சேதத்தால் ஏற்படும் கூச்ச உணர்வு, நழுவிய வட்டுக்களால் ஏற்பட்ட நரம்பு சேதம்.

உடனே மருத்துவரை அணுக வேண்டியவர்கள்:

நடந்தாலோ அல்லது அசைந்தாலோ கடுமையான வலியை உணர்பவர்கள். என்ன தான் மருந்து மாத்திரைகளை எடுத்தாலும் தாங்க முடியாத வலியை உணர்பவர்கள், இரண்டு கால்களும் உணர்வின்றி மரத்து போயிருப்பவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

தீர்வு

எண்ணெய் மசாஜ் செய்வது இயற்கை தீர்வாகும். மேலும் அவ்வப்போது நடைபயிற்சி, மெல்லோட்டம் செய்வது நல்லது. யோகாசனம் சிறந்த பயிற்சியாக விளங்குகிறது.

No comments:

Post a Comment

Join Our Telegram Group