பட்டுப்போன்ற கூந்தல் பெற... - KALVISEITHI | கல்விச்செய்தி

Friday, 20 December 2019

பட்டுப்போன்ற கூந்தல் பெற...

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

முட்டையில் கூந்தலுக்கு தேவையான புரோட்டீன் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனால் கூந்தலானது ஆரோக்கியமாகவும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும். அதற்கு முட்டையை தேன், எலுமிச்சை அல்லது பாலுடன் சேர்த்து கலந்து, கூந்தலுக்கு மாஸ்க் போட்டு, அரை மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலசவேண்டும்.

முட்டையில் கூந்தலுக்கு தேவையான புரோட்டீன் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனால் கூந்தலானது ஆரோக்கியமாகவும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும். அதற்கு முட்டையை தேன், எலுமிச்சை அல்லது பாலுடன் சேர்த்து கலந்து, கூந்தலுக்கு மாஸ்க் போட்டு, அரை மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலசவேண்டும்.

பாலிலும் புரோட்டீன், பி-காம்பிளக்ஸ் நிறைந்திருப்பதால், அதனை தலைமுடிக்குத் தடவி மசாஜ் செய்து குளித்து வந்தால், அவை முடிக்கு ஆரோக்கியத்தை மட்டுமின்றி, மென்மையையும் கொடுக்கும்.
கூந்தல் பராமரிப்பு என்று வரும்போது அதில் நிச்சயம் எண்ணெய் கொண்டும் பராமரிப்பதும் இருக்கும். அதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு தலையை நன்கு மசாஜ் செய்து ஊறவைத்து குளித்து வந்தால் முடியானது பொலிவோடு மென்மையாக இருக்கும்.

வாழைப்பழத்தை அரைத்து, அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதனை தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

தயிரிலும் புரோட்டீன் அதிக அளவில் உள்ளது. தயிரில் கடலை மாவு மற்றும் அரைத்த வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து கலந்து, தலைக்கு தடவி நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும்.

ஆனால் அவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக, தலைக்கு ஷாம்பு போட்டு குளித்த பின்னர், சிறிது பீரைக் கொண்டு கூந்தலை அலசினால், கூந்தல் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.

தலைக்கு ஷாம்பு போட்டு குளித்த பின்னர், ஆப்பிள் சீடர் வினிகரை சிறிது நீரில் கலந்து இறுதியில் கூந்தலை அலசினால், கூந்தல் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தலைக்கு முட்டை, எண்ணெய், பால் கொண்டு ஹேர் பேக் போடும்போது, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஹேர் பேக் போட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

கடலை மாவை தயிர் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின்னர் கழுவினால், கூந்தல் நன்கு மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group