முதன்முறையாக ஒவ்வொரு கோயில்களில் மாணவர்களுக்கான திருப்பாவை, திருவெம்பாவை போட்டி நடத்த அரசு உத்தரவு - KALVISEITHI | கல்விச்செய்தி

Saturday, 21 December 2019

முதன்முறையாக ஒவ்வொரு கோயில்களில் மாணவர்களுக்கான திருப்பாவை, திருவெம்பாவை போட்டி நடத்த அரசு உத்தரவு

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

அறநிலையத்துறை சார்பில் முதன்முறையாக ஒவ்வொரு கோயில்களில்  மாணவர்களுக்கான திருப்பாவை, திருவெம்பாவை போட்டி நடத்த வேண்டும் என்று கமிஷனர் பணீந்திரரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

 இது தொடர்பாக கமிஷனர் பணீந்திர ரெட்டி கோயில் அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்அதில், இந்தாண்டும் மார்கழி இசைத்திருவிழா (பாவை விழா) சிறப்புற நடத்தி ஏதுவாக திருப்பாவை, திருவெம்பாவை பண்ணொடு பாட மாணவ, மாணவியர்களுக்குபயிற்சி அளித்து பின் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.ஐந்தாம் வகுப்பு வரை, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு தலைப்பு போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று  மாணவர்களை தேர்வு செய்து பரிசுகள் கோயில் சார்பாக அளிக்கப்பட வேண்டும்.முதல் மூன்று பரிசுக்கு பரிசுத்தொகையாக ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.1000 வழங்கப்பட வேண்டும். இந்தாண்டு சென்னை மண்டலத்தில் மாநில அளவில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மார்கழி இசை திருவிழா நடத்தப்படவுள்ளது.

இந்த போட்டி தேர்வு குழு ஒருங்கிணைப்பாளராக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் துணை  ஆணையர் நியமனம் செய்யப்படுகிறது. உதவியாக செயல் அலுவலர்கள் லட்சுமி காந்த பாரதிதாசன், சந்திரசேகரன், நற்சோனை, ராஜா இளம்பெருவழுதி, தேன்மோழி, பிரகாஷ் நியமிக்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group