ஸ்மார்ட் ரேஷன் கார்டு இல்லையா?... தமிழக அரசின் பொங்கல் பரிசைப் பெற வழி இதோ! - KALVISEITHI | கல்விச்செய்தி

Monday, 30 December 2019

ஸ்மார்ட் ரேஷன் கார்டு இல்லையா?... தமிழக அரசின் பொங்கல் பரிசைப் பெற வழி இதோ!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here
ஸ்மார்ட் ரேஷன் கார்டு இல்லையா?... தமிழக அரசின் பொங்கல் பரிசைப் பெற வழி இதோ!
ஜனவரி 9-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, முந்திரி, திராட்சை அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
2 கோடியே 5 லட்சம் அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள். ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் பொங்கல் பரிசு வழங்க தடைவிதிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத மாவட்டங்களுக்கு பொங்கல் பரிசு அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறுகிறது.
இதனையடுத்து ஜனவரி 9ம் தேதி பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜனவரி 9ம் தேதி தெடாங்கி ஜனவரி 12ம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது 

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.1000 ஆகியவற்றை மின்னணு குடும்ப அட்டைகள்(Smart Card ) மூலமாகத்தான் வழங்க வேண்டும்.அவ்வாறு குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு அக்குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையினை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு வரும் OTP (ஒருமுறை கடவுச் சொல்) அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கலாம். இதற்கான உரிய பதிவுகள் ஒப்புதல் படிவத்தில் பதிவுத் தாளில் குறிப்பிடப்பட வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டதும் அவர்களது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. தலைப்பிற்கும் கொடுத்த தகவலுக்கு சம்பந்தமே இல்லையே

    ReplyDelete
    Replies
    1. பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.1000 ஆகியவற்றை மின்னணு குடும்ப அட்டைகள்(Smart Card ) மூலமாகத்தான் வழங்க வேண்டும்.அவ்வாறு குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு அக்குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையினை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு வரும் OTP (ஒருமுறை கடவுச் சொல்) அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கலாம். இதற்கான உரிய பதிவுகள் ஒப்புதல் படிவத்தில் பதிவுத் தாளில் குறிப்பிடப்பட வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டதும் அவர்களது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      Delete

Join Our Telegram Group