ஒரே ஆசிரியருக்கு 2 கட்டதேர்தல் பணி ஒதுக்கீடுசெய்துள்ளதை சரி செய்யாவிட்டால் 2ம் கட்ட தேர்தல்பணியினை புறக்கணிக்கஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில்ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27மற்றும் 30ம் தேதி என இரண்டுகட்டங்களாக நடக்க உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒன்றியகவுன்சிலர், ஊராட்சி தலைவர்,ஊராட்சி வார்டு உறுப்பினர் எனமொத்தம் 2,524 பதவிகளுக்குதேர்தல் நடக்கிறது.
தேர்தல் பணியில் ஈடுபட உள்ளஆசிரியர்கள், அங்கன்வாடிஊழியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு முதல்கட்டபயிற்சி வகுப்பு நடந்துமுடிந்துள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் தலைமைஅலுவலருடன் சேர்த்து 7 பேர்பணியாற்ற உள்ளனர். ஒரு சிலவாக்குச்சாவடிகளில் இரண்டுவார்டுகள் வரும் பட்சத்தில் 8 ஊழியர்கள் வரை பணியாற்றஉள்ளனர். இதன்படி மாவட்டத்தில்1,576 வாக்குச்சாவடிகள்அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தேர்தல் பணிநியமனத்தில் பல்வேறுகுளறுபடிகள் நடந்துள்ளதாகஆசிரியர்கள் புகார் தெரிவித்துவருகின்றனர். குறிப்பாகமுதல்கட்ட தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களில்பெரும்பாலானவர்களுக்கு 2ம்கட்ட தேர்தலிலும் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதேவேளையில் 50 சதவீதஆசிரியர்களுக்கு முதல் மற்றும்இரண்டாம் கட்டம் என இரண்டுகட்ட தேர்தலிலும் பணிவழங்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும்புகார் எழுந்துள்ளது.
இதேபோல அலுவலக உதவியாளர்கள் மற்றும்அங்கன்வாடி பணியாளர்களைவாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாக நியமித்திருப்பதுசர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து முதல்கட்ட பயிற்சிவகுப்பில் கலந்து கொண்டஆசிரியர்கள் புகார் தெரிவித்தும்வட்டார வளர்ச்சி அலுவலர்கள்எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்ைல. இதனால்அதிருப்தியடைந்துள்ளஆசிரியர்கள் மாவட்ட தேர்தல்அதிகாரி நடவடிக்கைஎடுக்காவிட்டால் 2ம் கட்ட தேர்தல்பணிைய புறக்கணிக்க முடிவுசெய்துள்ளனர்.
இது குறித்து ஆசிரியர்கள்தரப்பில் கூறியதாவது: வாக்குச்சாவடி பணி நியமனத்தில்மாவட்ட நிர்வாகம் பல்வேறுகுளறுபடிகளை செய்துள்ளது.ஒரே ஆசிரியர் 2 கட்ட தேர்தல்பணியும், ஒரு சில குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு எவ்விதபணியும் வழங்காமல்புறக்கணித்துள்ளனர். திட்டமிட்டு உள்நோக்கத்துடன் இதுநடைபெற்றிருப்பதாகசந்தேகிக்கின்றோம். தேர்தல் பயிற்சி வகுப்பில் எங்களதுபுகாரை தெரிவித்தும் எவ்விதநடவடிக்கையும் எடுக்காமல்உள்ளனர். எனவே 2ம் கட்டதேர்தல் பணியை புறக்கணிப்பதுகுறித்து ஆசிரியர்களுடன் கலந்துஆலோசித்து வருகிறோம்என்றனர். இது குறித்து தேர்தல்பிரிவு அதிகாரிகளிடம்கேட்டபோது, பணி ஒதுக்கீடுகணினி மூலம் ரேண்டம்அடிப்படையில் தேர்வுசெய்யப்பட்டது. ஊரக உள்ளாட்சிதேர்தலில் பணியாற்றியவர்களுக்கு நகர்ப்புறஉள்ளாட்சியில் பணிவழங்கப்படாது. தற்போது பணிஒதுக்கப்படாதவர்களுக்குநகர்ப்புற உள்ளாட்சியில் பணிகட்டாயம் வழங்கப்படும்என்றனர்.
No comments:
Post a Comment