மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் கடவுளை விட ஆசிரியரே மேலானவர் என்பதை அறியலாம். மாணவர்கள் வீட்டில் இருப்பதை விட பள்ளியில் ஆசிரியர்களிடம் அதிக நேரம் இருக்கின்றனர். எப்பொழுதுமே மாணவர்கள் பள்ளி ஆசிரியரையே வழிகாட்டியாகவும், முன்னுதாரணமாகவும் எடுத்து கொள்வர். அதன் பின் கற்ற கல்விக்கு தகுந்தார்போல தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்வர். ஆசிரியர் பணி என்பது மிகவும் புனிதமான ஒன்று. ஆசிரியர்கள் தங்களது சொந்த குழந்தையை போலவே மாணவர்களையும் நினைப்பர். எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்வது மருத்துவ பணியும், ஆசிரியப் பணியும்தான். ஆனால் அந்த மருத்துவரையும் உருவாக்குவது ஆசிரியரே.
அந்த வகையில் புதிய முறையில் நவீன டெக்னாலஜிகளை கல்வியில் புகுத்தி மாணவர்கள் விரும்பும் வகையில் பாடத்தை கற்பிக்கிறார் சிவகாசி நாரணாபுரம் அரசு மேல்நிலை பள்ளி கணிதவியல் ஆசிரியர்கருணைதாஸ். இலவசமாக கிடைக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி பாடம் கற்பிக்கிறார். ஆங்கில வார்த்தைகளை விரைவாக தட்டச்சு செய்யவும், புதிய வார்த்தைகளை அறியவும் ஸ்பெயின்ட் மூலமாகவும் கூட்டல், கழித்தல் பெருக்கல், வகுத்தல் போன்ற கணக்குகளை விரைவாகவும், ஆர்வமாகவும் செய்ய டக்ஸ்மேத்ஸ் மூலமாகவும், மாணவர்களின் பேச்சுத்திறன், பாடும் திறன் வளர்க்க அடாசிட்டி மூலமாகவும் , படங்களை வீடியோக்களாக உருவாக்க போட்டோஸ்டோரி மூலமாகவும் கற்பித்து வருகிறார். பவர்பாயின்ட் பிரசன்டேஷன் மூலம் கற்பிக்கிறார். வேறு மொழியில் இருந்தாலும் மொழி மாற்றம் செய்து அறிவியல் பாடத்தினை சிந்திக்க செய்கிறார். மாணவர்களை அறிவியல் சாதனையாளர்களாக உருவாக்கி வருகிறார். இவரின் சிறந்த சேவைக்காக இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை தகவல் தொழில் நுட்ப தேசிய விருதுக்கு தேர்வு செய்துள்ளது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment