இனிப்பு நிறைந்த வெல்லம் உடல் உறுப்புகளைப் பாதுகாக்கிறதா? - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday, 25 December 2019

இனிப்பு நிறைந்த வெல்லம் உடல் உறுப்புகளைப் பாதுகாக்கிறதா?

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

சர்க்கரை இனிப்பாக இருக்கும்.கூடவே இராசயனங்களும் கலந்திருக்கும்.வெல்லமும் இனிப்பாக இருக்கும்.கூடவே ஆரோக்கியமும் இணைந் திருக்கும். நீங்கள் என்ன பயன்படுத்துகிறீர்கள். பளபள சர்க்கரையா.. பழுப்பு நிறைந்த வெல்லமா...

வெல்லத்தின் இனிப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்


இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, காரம், புளிப்பு என்று நீக்கம்ற நிறைந்திருக்கும் உணவுகளில் எல்லோரும் விரும்புவது இனிப்பு நிறைந்த உணவுவகைகளைத்தான்.

வெள்ளையாக இருக்கும் சர்க்கரையைத் தான் வெள்ளந்தியாக எல்லா உணவுகளிலும் நீக்கமற பயன்படுத்திவருகிறோம். ஆனால் சத்துக்கள் பிழிந்த வெள்ளை சர்க்கரையை விட சத்துகள் நிறைந்த வெல்லம் பலமடங்கு மேலானது என்பது தெரி யுமா?
உணவே மருந்தாக வாழ்ந்துகொண்டிருந்த நம் முன்னோர்கள் இனிப்புக்காக பயன்படுத்தியது வெல்லம் தான். இனிப்பு வகைகள் செரிமானக்கோளாறை உண்டாக்கும் என்பதெல்லாம் சர்க்கரை சேர்த்த இனிப்புக்குத்தான். வெல்லம் சேர்த்த இனிப்புக்கு அல்ல என்பதை அன்றே உணர்ந்திருந்தார்கள் நம் முன்னோர்கள்.

பண்டைய காலத்தில் வெள்ளை சர்க்கரை இல்லாத போதும் விதவிதமான இனிப்பு வகைகளை அரசர்கள் உண்டு வந்தார் கள். அவை அனைத்துமே வெல்லம் கொண்டு தயாரிக்கப்பட்டவைதான்.

வெல்லம்
கரும்புச்சாறிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லத்தில் சத்துகள் அழிக்கப்படுவதில்லை என்பதால் இது ஆரோக்கியமானது என்கிறார்கள் முன்னோர்கள். கரும்புச்சாறின் கசடுகள் நீங்க வடிகட்டி அதை பல மணி நேரம் சுண்டவைத்து அதிலிருக்கும் கசடுகளும் நீக்கப்பட்டு பெரிய அச்சுகளில் ஊற்றி கெட்டியானதும் அவை வெல்லமாக வருகிறது.


வெல்லத்தில் இனிப்புகளைத் தயார் செய்யுங்கள்

பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் பதனீரைக் காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்ற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இது பனைவெல்லம், கருப்பட்டி என்று அழைக்கப்படுகிறது. இது பனை மரத்திலிருந்து பதனீர் பெறக்கூடிய காலத்தில் மட்டுமே கிடைக்கும். ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே இதைப் பெற முடியும் என்பதால் போலி பனங்கருப்பட்டிகளும் பெருகி வருகி றது என்பது குறிப்பிடத்தக்கது.

வெல்லத்தின் என்ன இருக்கு
வெல்லத்தைப் போன்று சுவை கொடுக்கும் சர்க்கரையும் கரும்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்றாலும் சர்க்கரை பதத் துக்கு அதிக கெமிக்கல்கள் சேர்க்கப்படுகிறது. அப்படி சேர்க்கப்படும் போது கரும்பில் இருக்கும் சத்துகள் முற்றிலும் அழிந் து விடுகிறது என்கிறார்கள். ஆனால் வெல்லத்தில் வைட்டமின் சி அற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது. 10 கிராம் வெல்லத்தில் 16கிராம் மெக்னீசியம் உள்ளது. துத்தநாகம், செலினியம் போன்றவை உண்டு.

வெல்லம் உடலுக்கு என்னென்ன நன்மைகளைத் தருகிறது என்று பார்க்கலாமா?

விருந்தில் வெல்லம்
முன்னோர்கள் காலத்தில் விருந்து உபசாரத்தில் தலை வாழை இலை பரப்பி உணவு படைக்கும் போது கண்டிப்பாக ஒரு துண்டு வெல்லம் இலையில் இருக்கும். அல்லது வெல்லம் சேர்த்த இனிப்பு வகை கட்டாயம் இடம்பெறும். சாப்பிட்டு முடித் ததும் இந்த வெல்லத்தைச் சாப்பிட்டால் பலமான விருந்தாக இருந்தாலும் செரிமானம் பிரச்சனையின்றி எளிதாகும்.

இந்தப் பழக்கம் தான் மெல்ல மெல்ல வெல்லத்துண்டிலிருந்து வெல்ல இனிப்புக்கு மாறியது. இனிப்போடு கூடிய விருந்து என்பதும் கட்டாயமாகியது. அவையே இன்று சர்க்கரை கலந்த இனிப்புகளாக இடம்பிடித்து கூடவே செரிமான பிரச்சனைக ளையும் உண்டாக்கியிருக்கிறது.


இன்றும் அசைவ உணவு வகைகளை எடுத்துகொள்ளும் போது சாப்பிட்டு முடித்ததும் ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் வயிறு பசிக்க தொடங்கும். குழந்தைகள் மந்தமாக இருந்தால் சாப்பிட்டு முடித்ததும் ஒரு துண்டு வெல்லம் கொடுத்து பழக்குங்கள். நேரத்துக்கு அடம்பிடிக்காமல் சாப்பிடுவார்கள்.

இப்போது வெல்லத்தில் சுக்கு, ஏலப்பொடி சேர்த்து செரிமானத்துக்கு என்று சொல்லியே விற்கிறார்கள்.

தாகம் தணிக்கும்
கோடைக்காலங்களில் தாகம் தீர்க்கும் அருமருந்து வெல்ல பானம் என்று சொல்லலாம். எந்தவித பக்கவிளைவையும் உண் டாக்காமல் உடலுக்கு ஆற்றலையும் தந்து சோர்விலிருந்து மீட்க ஒரு துண்டு வெல்லம் போதும். பானகம் என்று சொல்லும் இதைத் தயாரிப்பதும் எளிதானதுதான்.

ஒரு தம்ளர் நீரில் ஏலக்காய்த்தூள் சேர்த்து வெல்லைத்தைப் போட்டு கலந்து குடித்தால் தாகமும் தீரும். உடல் அயற்சியும் நீங்கும்.


தாகம் தணிக்கும் பானகம் வெல்லம் கலந்த நீர்

உறுப்புகள் பாதுகாப்பு
வெல்லத்தில் அதிகம் நிறைந்திருக்கும் இரும்புச்சத்து இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இதில் இருக் கும் அதிகப்படியான பொட்டாசியம், சோடியம் அளவு உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைப் பிரித்து செய்யும் வேலையை கல்லீரல் செய்கிறடு அந்த கல்லீரலை சுத்தம் செய்வதோடு பாதுகாப்பாகவும் வைக்க உதவுகிறது. மேலும் நுரையீரல், உணவுக்குழாய், வயிறு பகுதியையும் சுத்தம் செய்கிறது.

வெல்லத்தில் இரும்புச்சத்து, கால்சியம் இருப்பதால் சிறுவயது முதலே எடுத்துகொள்பவர்களுக்கு மூட்டுவலி, முடக்கு வாத பிரச்சனைகள் அண்டாது.வெல்லத்தை எடுத்துகொள்பவர்கள் வாழ்நாள் முழுவதும் தீராத நோயை பெறுவதற்கான வாய்ப்பில்லை என்பதை உறுதியாக சொல்லலாம்.

பெண்கள் மாதவிலக்கு, மெனோபாஸ் போன்றவற்றை சந்திப்பதால் அதிகப்படியாக இரும்புச்சத்தை இழப்பார்கள். அதை ஈடு செய்ய வெல்லம் கலந்த உணவுகள் உதவும்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group