நல்ல கொழுப்புகள் குறைந்திருந்தால் அதை அதிகரிக்க வேண்டிய மாத்திரைகள் எதுவும் கிடையாது. நல்ல கொழுப்புள்ள உணவு வழியாகவே அதை பெற முடியும். நல்ல கொழுப்பை உருவாக்கும் கல்லீரலின் செயல்பாட்டைச் சீராக இயக்கும் வகை யில் உணவு முறைகளை மாற்றிக்கொள்வது நல்லது.
உனக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சி போல” என்று கிண்டலாகவும் கொஞ்சம் சீரியஸாகவும் விமர்சனம் செய்பவர்களைப் பார்த்திருக்கிறோம்.நேரத்துக்குவயிறுநிறைய சாப்பிட்டு உடலை அலட்டிக் கொள்ளாமல்நாள்கணக்கில் இருந்தால் அதிகப்படியான கொழுப்பு உடலுக்குள் சேர்ந்துவிடும் என்று சொல்வார் கள். ஓரளவு இதை ஏற்றுக்கொள்ளலாம்.ஏனெனில் அறுவை சிகிச்சை அல்லது விபத்துக்கு பிறகான ஓய்விலிருந்து மீள்பவர்கள் நீண்ட நாள் படுக்கையில் இருந்ததால் உடலுக்கு போதிய உழைப்பின்றி அதிக கொழுப்பால் வயிறு தொப்பையாகி விட்டதாகசொல்வார்கள்.
கொழுப்பு அவ்வளவு ஆபத்தானதா? அப்படியானால் உடலில் கொழுப்பு சேர லாமா கூடாதா? அப்படி கொழுப்பு உடலுக்கு சேர என்ன உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
கொழுப்பு
குழந்தைகருவில் வளரும் போதே குழந்தையின் உறுப்புகள் வளரத்தொடங்கும் நிலையில் கொழுப்பு செல்களும் உருவாக தொடங்குகிறது. அதன்பிறகு அந்தக் குழந்தை பருவ வயதை எட்டியதும் அவர்களது பாலினத்துக்கேற்ப ஹார்மோன் தூண்டுதலில்அந்த உடல் நிலைக்கேற்ப கொழுப்பு படிய தொடங்குகிறது. சாதாரணமான வளர்ச்சியில் கொழுப்பு படிவத்தில் மாற்றம் இருக்காது. ஆனால்உடல் வளர்ச்சியில்உடல் எடையில் மாற்றம் இருக்கும் போது கூடுதல் கொழுப்பு படிவதற்கு வாய்ப்பு உண்டு. இந்த கூடுதல் கொழுப்பு நன்மை அளிக்குமா என்றால் நிச்சயம் இல்லை என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
கொழுப்பின் வகை:
உடலில் இருக்கும் செல்களுக்கு தேவையான சக்தியை செய்துவருகிறது கொழுப்பு. ஹெச்டிஎல்(HDL- High Density Lipo protein) என்ற கொழுப்பு நல்ல கொழுப்பு (மிக அடர்த்தி) என்றும், எல்டிஎல் (LDL- LowDensity Lipoprotein) என்பது கெட்ட கொழுப்பு (குறை அடர்த்தி கொழுப்பு) என்றும், விஎல்டிஎல் (VLDL- Very LowDensity Lipoprotein) மிக குறை அடர்த்தி கொழுப்பு என்றும், முக் கிளிசரைடு (tryglycerides) என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.
கொழுப்பின் வகைகளும் இருக்க வேண்டிய அளவுகளும்:
உடலில் மொத்த கொழுப்பின் அளவு 200 மி.கி. அளவுக்கு மேல் செல்லும் போது மாரடைப்புக்கான வாய்ப்புகள் உருவாகிறது. இதே போன்று எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு 100 மி.கிராமுக்கு மிகாமலும், விஎல்டிஎல் மிக குறை அடர்த்தி கொழுப்பு 30 மி.கிராமுக்கு மிகாமலும், முக்கிளிசரைடுகள் 130 மி.கிராமுக்கு மிகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதே நேரம் ஹெச்டிஎல் எனப்படும்நல்ல கொழுப்புகள் 35 மி.கிராமுக்குகுறைவாக இருந்தால் மாரடைப்பு வருவதற் கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்த நல்ல கொழுப்பு 50 மி.கிராமுக்கு அதிகரிக் கும் போதுஇதய நோய் வராமல் தடுக்கப்படுகிறது. சுருங்க சொன்னால், ஆண்க ளுக்கு நல்ல கொழுப்பு என்பது 40 கிராமுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு 25 கிராமுக்கு அதிகமாகவும் இருத்தல் வேண்டும்.
அதே போன்று கெட்ட கொழுப்பு 139 மி.கிராம் அளவுக்கு குறைவாக இருக்க வேண்டும்.ஆனால் இந்தியாவில் பெரும்பாலும் இருபாலருக்கும் கெட்ட கொழுப் புகள் அதிகம் உடலில் தங்கி விடுவதோடு நல்ல கொழுப்புகளின் அளவும்குறைந்தே காணப்படுகிறது. இதனால் நடுத்தர வயதிலேயே இதய நோய் சம் பந்தமான பாதிப்புகளையும் எதிர்கொள்கிறார்கள்.
கொழுப்பு இப்படிதான் உருவாகிறது:
நாம் உண்ணும் உணவுகள் செரிமானம் ஆகி அதில் இருக்கும் சத்துக்கள்இரத்தத்தில் கலக்கின்றன.அப்போது இதில் இருக்கும் கொழுப்பு குடலில் உறிஞ்சப்பட்டு கல்லீரலில் சேமித்துவைக்கப்படுகிறது. உடல் உறுப்புகளுக்கு வேண்டிய போது கொழுப்பை வெளிவிடவும், உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் கல்லீரலே செயல்படுகின்றது.
கொழுப்புக்கு என்ன வேலை:
கொழுப்பு உடலில் இருக்கும் செல்களைச் சீராக செயல்புரிய வைக்கும் பணியை செய்கிறது. பித்தநீர்சுரக்க உதவி புரிவதோடு உணவில் இருக்கும் கொழுப்பு மற்றும் கரையும் வைட்டமின் ஏ,டி,ஈ,கே போன்றவற்றைஇரத்தத்தில் கலக்க செய்கிறது. மூளையின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் துணைபுரிகிறது. ஈஸ்ட்ரோஜன், டெஸ்ட்டோஸ்டிரான் ஹார்மோன் சுரப்புக்கு பயன்படுகிறது.
கெட்ட கொழுப்பு என்ன செய்யும்:
எல்டிஎல்என்றழைக்கப்படும் கெட்ட கொழுப்புஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் போதுஇரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர் களில் படிகங்களாக தேங்கி விடுகிறது. நாளடைவில் தொடர்ந்து உடலில் கெட்டகொழுப்புகள் அதிகரித்துக் கொண்டே போகும் போதுமுதலில் சீரான இரத்த ஓட்டத்தைத் தடை செய்கிறது.இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு இளவயதிலேயே மாரடைப்பையும் ஏற்படுத்திவிடுகிறது. அளவுக் கதிகமான கொழுப்பு நீரிழிவு நோயையும் உண்டாக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல கொழுப்பு என்ன செய்யும்:
ஹெச்டிஎல் என்றழைக்கப்படும் நல்ல கொழுப்பு உடலில் இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்குவதோடு கெட்ட கொழுப்புகள்படிவ தையும் தடுக்கிறது. கெட்ட கொழுப்புகளை ஈர்த்து கல்லீரலுக்கு கடத்தி அங் கிருந்து அதை வெளியேற்றவும் துணைபுரிகிறது.
நல்ல கொழுப்பு அதிகரிக்க என்ன செய்யலாம்?
உடலில்நல்ல கொழுப்புகள் குறைந்திருந்தால் அதைஅதிகரிக்கவேண்டியான மாத்திரைகள் எதுவும் கிடையாது. நல்ல கொழுப்புள்ள உணவு வழியாகவே அதை பெற முடியும். நல்ல கொழுப்பைஉருவாக்கும் கல்லீரலின் செயல்பாட்டை சீராக இயக்கும் வகையில் உணவு முறைகளை மாற்றிக்கொள்வதுநல்லது.
ஆரோக்யமான கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துகொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் அத்தகைய உணவுகளாக அவர்கள் பரிந்துரைப்பதுஅசைவ உணவுகளில் மீன், சால்மன், சுறா, பாதாம், வால்நட், வாதாம் போன்ற பருப்பு வகைகள், நார்ச்சத்துமிக்க முழு தானியங்கள் உதாரணத்துக்கு ராஜ்மா, மூக்கடலை, சோயா, நிலக்கடலை வகைகள், வெங்காயம், பூண்டு, பால் எண்ணெய் வகைகளில் நல்லெண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் நல்ல கொழுப்புகளை அதிகரிக்கலாம்.
கெட்ட கொழுப்புகளை உண்டாக்கும் உணவு வகைகள்
இன்றைய சூழ்நிலையில் அனைவரும் வயது பேதமின்றிஅடிமையாகி கிடப்பது கெட்ட கொழுப்புகளை உண்டாக்கும் உணவு வகைகளின் மீதுதான். கடைகளில்கொழுப்பில்லாத உணவு வகைகள் என்று குறிக்கப்பட்டிருக்கும் பாக்கெட் உணவு பொருள்களிலும் அதிகப்படியான சர்க்கரையும், கலோரியும் இணைந்து உடலுக்கு கேடையே தரும் என்பதை மறந்து விடுகிறோம்.
வேகவைத்த காய்கறிகளின் இடத்தை நீக்கமற நிறைத்திருக்கும்எண்ணெயில் வறுத்த, பொரித்த அசைவ மற்றும் க்ரிஸ்பி உணவுகள் அனைத்துமே உடலில் அதிக கொழுப்புகளை உண்டாக்கி அதை வெளியேற செய்யாமல் உடல் பருமனுக்கு உள்ளாக்கிவிடுகிறது. இவை தவிர ஐஸ்க்ரீம், பேக்கரி வகைகள், தொடர்ந்து சாக்லெட், வெள்ளை சர்க்கரை கலந்த இனிப்பு வகைகள், முட்டையின் மஞ்சள் கரு, கோழி, ஆடு,மாடு, பன்றி இறைச்சி வகைகள் (அளவுக்கு அதிகமாக தொடர்ந்து எடுக்கும் போது)போன்றவற்றை எடுக்கும் போது இதிலிருக்கும் கொழுப்புகள் கல்லீரலில் வேகமாக கொழுப்பாக மாறி இரத்தத்தில் கலந்து உட லில் இருக்கும் கெட்ட கொழுப்புகளின் அளவை மிகுதியாக்கிவிடுகிறது.
உங்கள் உடம்பில் இருக்கும் கொழுப்பின் அளவை உங்கள் மருத்துவரின் ஆலோ சனையின் பெயரில் தகுந்த பரிசோதனையில் அறிந்து கொள்ளுங்கள். ஆரோக்யமான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். இனிமேல் உங்களைப் பார்த்து யாராவது “கொழுப்பு அதிகமா” என்று கேட்டால் “ஆமாம் எல்லாமே நல்ல கொழுப்பு தான்”என்று உற்சாகமாக சொல்லுங்கள்…
No comments:
Post a Comment