EMIS - பெர்பாமென்ஸ் இண்டிகேட்டர் மூலம் ஆசிரியர்களை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு! - KALVISEITHI | கல்விச்செய்தி

Sunday 22 December 2019

EMIS - பெர்பாமென்ஸ் இண்டிகேட்டர் மூலம் ஆசிரியர்களை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here



இணையதளம் வாயிவாக , அரசு பள்ளி ஆசிரியர்களின் கற்றல் திறனை , மதிப்பீடு செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது .

தகுதியான ஆசிரியர்கள் தான் திறமையான மாண வர்களை உருவாக்க முடியும் . முதல் மார்க்கில் தேர்ச்சி அடையும் மாணவ ருக்கு , போதிய திறமை இல்லை என்ற காரணத் தால் வேலைவாய்ப்பு பறிபோகிறது . மார்க் முக்கியமில்லை ; மாணவர்களின் திறமையே முக்கியம் என்று ஐ . டி . உள்ளிட்ட எல்லா துறைகளும் வடிகட்டி வருகின்றன . மார்க் குவித்த மாணவர் களால் , நீட் , ஜேஇஇ போன்ற உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளிலும் , டிஎன் பிஎஸ்சி , வங்கித் தேர்வுகள் , ஆர்ஆர்பி போன்ற வேலை வாய்ப்பு போட்டித் தேர்வுகளிலும் ஜொலிக்க முடிவதில்லை .

இந்த நிலை தமிழகம் மட்டுமின்றி , நாடு முழுவதும் உள்ளது . எனவே , மனப்பாட கல்வி முறையை கொஞ்சம் , கொஞ்சமாக ஒழிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர் . அதற்கேற்ப , மத்திய , மாநில பாடத் திட்டங்களிலும் , ஆசிரியர்கள் , மாணவர்களுக்கான பயிற்சிகளிலும் பல மாற்றங்களை மத்திய , மாநில அரசுகள் செய்து வருகின்றன . தமிழகத்தில் , மத்திய பாடத்திட்டத்துக்கு இணையாக , கல்வித்துறையில் பல மாற்றங்களை தமிழக அரசு புகுத்தி வருகிறது . புத்தக தகவலை மட்டும் மாணவர்கள் படித்தால் போதாது . புத்தகம் தாண்டி , கூடுதல் தகவல்களை தேடி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் , பாடப் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் கியூஆர் கோடு வழங்கப்பட்டுள்ளது . ஸ்மார்ட் போன் மூலம் அந்த ' கியூஆர் கோடு ஸ்கேன் செய்தால் , புத்தகத் தில் உள்ள சப்ஜெக்ட் தொடர்பாக கூடுதலாக பல தகவல்களை தேடி படிக்கலாம் .

இது , மாணவர்களின் சுய அறிவை வளர்க்க உதவும் . அதேபோல , அரசு பள்ளி ஆசிரியர்களின் திறனையும் கண்காணிக்க முடிவு செய்துள்ளது . தகுதியான ஆசிரியர்கள் ' டெட் ' தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர் . ஆசிரியர் பணிக்கு வந்த பின் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை ' டெட் ' தேர்வு நடத்தி அவர்கள் திறனை சோதிக்க வேண்டும் என்ற கோரிக்கை . மேம்பட்டு வருகிறது .

இத்திலையில் , பள்ளி மாணாவர்களை மதிப்பீடு செய்வது போல , ஆசிரியர்களில் கற்பிக்கும் இறனை சுய மதிப்பீடு செய்ய கல்வித்துறை இப்போது நடவடிக்கை எடுத்துள்ளது . ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் இந்த முறையில் மதிப்பீடு செய்யப்பட உள்ளனர் . இதற்காக , ' எமிஸ் கல்வி இணையதளத்தில் ஆசிரியர்களின் , பெர்பாமென்ஸ் இண்டிகேட்டர் என்ற பிரிவு கூடுதலாக இணைக்கப்பட் டுள்ளது . இதில் , தான் கற்பிக்கும் வகுப்பு பாடத்தை தேர்வு செய்து , தகவல்களை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் . பாடப்புத்தகம் மற்றும் கற்றல் உபகரணங்களைப் பயன்படுத்தி கற்பித்தல் மற்றும் கற்றல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் . கற்றல் செயல்பாட்டில் எல்லா மாணவர்களையும் ஒருசேர ஈடுபடுத்துதல் , மாணவர்கள் வகுப்பறை சூழலை பசிக்கும் வகையில் கற்றல் செயல்பாடுகளை திட்டமிடல் , பாடக்குறிப்புகள் தயார் செய்தல் , கற்றல் திறன் குறைந்த மாணவர்கள் மீது கவனம் செலுத்துதல் , சரியான உதாரணம் கூறுதல் போன்ற கேள்விகளுக்கு ஆசிரியர்கள் பதிலளிக்க வேண்டிவிருக்கும் .

இதன்மூலம் ஆசிரியர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு , மதிப்பீடு செய்யப்பட உள்ளது . தொடர்ந்து ஆசிரியர்களின் மதிப்பீடுகள் குறையும்பட்சத்தில் , குறிப்பிட்ட ஆசிரியருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும் . இதுகுறித்து , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் , அனைத்து பள்ளி தலைமை ஆசிரி யர்களுக்கும் கற்றறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட் டுள்ளது . இதற்கான பணிகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர் .

No comments:

Post a Comment

Join Our Telegram Group