Whatsapp - க்கு தடை வருகிறது !! - KALVISEITHI | கல்விச்செய்தி

Monday, 23 December 2019

Whatsapp - க்கு தடை வருகிறது !!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

உலகத்திலேயே சமூகவலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்தப் படுவது வாட்ஸ் அப் தான். இந்தியாவில் இன்னும் அதிகம் பகிரப்படுகிறது.

வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைத்தளங்கள் இந்திய. சட்டத்திற்கு கட்டுப்படுவதில்லை என்று கூறி மத்திய அரசு சில அதிரடி முடிவுகளை செயல்படுத்தி இருக்கிறது. தேவையற்ற புரளிகள்,வீண் விவாதங்கள்,ஆபாசப் பதிவுகள் பரவுவதை தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் நேரத்தில் சிறப்பு எண்கள் ஏற்பாடு செய்யபட்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என whatsapp சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில்தான் சிறார்கள் ஆபாச படங்கள் பார்ப்பது அதிகம் என்ற தகவலும் அது whatsapp மூலம் தான் அதிக அளவில் பகிர படுகிறது.

இதனை தடுக்க auto ban முறையில் எந்த நடவடிக்கையும் whatsapp எடுக்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. வலைத்தளங்களில் சிறார்களை பாதிக்கும் ஆபாசமான பதிவுகளை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு whatsapp நிறுவனங்கள் ஒத்துழைக்க மறுப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனை வன்மையாகக் கண்டிக்கும் விதத்தில் whatsapp மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட கால கெடுவினை நிர்ணயம் செய்து அதற்குள் ஒத்துழைப்பு நல்க மறுக்கும் நிறுவனங்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்திய சட்டதிருத்தத்திற்கு ஏற்ப மாறவில்லை என்றால் whatsapp க்கு இந்தியாவில் சில மாதங்கள் தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிலும் கோரிக்கைகள் நிறைவேற்ற படவில்லை என்றால் இந்தியாவில் whatsapp க்கு முற்றிலும் தடை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது மத்திய அரசு.

No comments:

Post a Comment

Join Our Telegram Group