கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை ஜனவர் 15ல் வருகிறது ஏன் ? - KALVISEITHI | கல்விச்செய்தி

Sunday, 19 January 2020

கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை ஜனவர் 15ல் வருகிறது ஏன் ?

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here


கடந்த சில ஆண்டுகளாக பொங்கல் பண்டிகை ஜனவர் 15ல் வருகிறது ஏன் ? முந்தய வருடங்களில் ஜனவரி 14ல் தானே வழக்கமாக வரும் ? ஏன் இந்த மாற்றம் ?

ஒரு சிறிய கால அளவு முறையை சற்று உற்று நோக்கினால் அதற்கான விடையும் கிடைக்கும் ....

குழந்தை பருவம் முதல் நாம் எண்ணிப்பார்த்தால் இதுவரை ஜனவரி 14ம் தேதியன்றே பொங்கள் கொண்டாடிக்கொண்டு இருந்தோம் ....


உண்மையில் 1935 முதல் 2007 வரை நாம் பொங்கல் பண்டிகையை ஜனவரி 14ல் தான் கொண்டாடிக்கொண்டு இருந்தோம்.

ஆனால் அதற்கும் முன்பு 1862 முதல் 1934 வரை பொங்கல் பண்டிகை ஜனவரி 13ம் தேதி கொண்டாடிக்கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள் .....

2080 வரை பொங்கல் பண்டிகை ஜனவரி 15ல் தான் இனி வரும் .....

2081 முதல் 2153 வரை பொங்கல் பண்டிகை ஜனவரி 16ம் தேதிக்கு மாறிவிடும் .....

ஏன் அப்படி நடக்கிறது ?

நமது முறை நாட்கள் கணக்கெடுப்பிற்கும் உலக வழக்கப்படியான நாள் கணக்கெடுப்பின்படி வருடத்துக்கு 20 நிமிடங்கள் வித்தியாசம் வருகின்றது.

அதனால் சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலம் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஒரு மணிநேரம் வித்தியாசப்பட்டுக்கொண்டே வருகிறது.

அதன்படி ஒவ்வொரு 72 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நாள் தள்ளிப்போகிறது ...

ஆனால் இந்திய முறை நாள் கணக்கெடுப்பே மிகச்சிறந்த கணக்கெடுப்பாகும் ....

நம் முறையில் நாட்களை கணக்கெடுப்பதால் நம்மால் வரப்போகும் 5000 வருடங்களுக்கான சூரிய - சந்திர கிரகனங்களை மிகத்துல்லியமாக கணக்கிட்டு கூற இயலும் ....

ஆங்கில முறை கணக்கெடுப்பால் அப்படி துல்லியமாக கணிக்க இயலாது .....

உதாரணமாக இன்றிலிருந்து 150 வருடம் கழித்து 2170 ம் வருடம் கிரகணம் ஏற்படும் நேரத்தை நம்மால் மிக துல்லியமாக இன்றே கணித்து கூற முடியும் ....

ஆங்கில முறை கணக்கெடுப்பால் அப்படி கணிக்க முடியாது.

No comments:

Post a Comment

Join Our Telegram Group