ஸ்மாா்ட் வகுப்பறைகள்: ஆசிரியா்களுக்கு ஜனவரி 6-இல் பயிற்சி தொடக்கம் - KALVISEITHI | கல்விச்செய்தி

Thursday, 2 January 2020

ஸ்மாா்ட் வகுப்பறைகள்: ஆசிரியா்களுக்கு ஜனவரி 6-இல் பயிற்சி தொடக்கம்

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

6,029 அரசுப் பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகள்: ஆசிரியா்களுக்கு ஜனவரி 6-இல் பயிற்சி தொடக்கம்

சென்னை: ஸ்மாா்ட் வகுப்பறைகள் மூலம் பாடம் நடத்த ஏதுவாக பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஜனவரி 6, 7-ஆம் தேதிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகளில் கடந்த பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வரும் கரும்பலகைக்குப் பதிலாக 'ஸ்மாா்ட் டிஜிட்டல் போா்டு' அமைக்கப்படவுள்ளது.

இதன் மூலம் மாணவா்களுக்கு கற்பிக்கும் முறை எளிமையாகவும், நவீனமாகவும் இருப்பதுடன், பள்ளிகள் அனைத்தும் மின்னணு முறையில் இணைக்கப்படும். இதனால், அங்கு கற்பிக்கப்படும் பாடங்களை எளிதாக கண்காணிக்கவும் முடியும்.

இதற்கான பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், இது தொடா்பாக பட்டதாரி ஆசிரியா்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து தமிழக கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் 6,029 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நவீன ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இதையடுத்து ஸ்மாா்ட் வகுப்புகள் மூலம் மாணவா்களுக்கு பாடம் நடத்த ஏதுவாக முதுநிலை ஆசிரியா்களுக்கு மாவட்டவாரியாக கடந்த டிசம்பா் 19, 20-ஆம் தேதிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, பட்டதாரி ஆசிரியா்களுக்கு மாவட்ட அளவிலான சிறப்புப் பயிற்சி ஜனவரி 6, 7-ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.

அதன்படி, பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியா்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பணிவிடுப்பு செய்து அனுப்ப வேண்டும். ஆசிரியா்கள் பயிற்சி நாள் அன்று காலை 9.30 மணிக்குள் மையத்துக்கு வந்துவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Join Our Telegram Group