சிபிஎஸ்இ தேர்வு எழுத 75% வருகை பதிவு தேவை!! - KALVISEITHI | கல்விச்செய்தி

Friday, 3 January 2020

சிபிஎஸ்இ தேர்வு எழுத 75% வருகை பதிவு தேவை!!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்து, பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயமாக இருக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இது குறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி/மார்ச் மாதங்களில் நடக்க இருக்கிறது.

மேற்கண்ட தேர்வுகளை எழுத உள்ள மாணவர்கள் 2020 ஜனவரி 1ம் தேதி யுடன் முடிந்த காலத்தில் 75 சதவீத பள்ளி வருகைப்பதிவை பெற்றிருக்க வேண்டும். குறைவான அளவில் வருகைப் பதிவு பெற்றுள்ள மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

குறைந்தபட்ச வருகைப்பதிவு பெற்றுள்ள மாணவர்களுக்கு மட்டுமே ஹால் டிக்கெட் வழங்கப்படும். குறைந்த அளவில் வருகைப் பதிவு பெற்றுள்ள மாணவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள சிபிஎஸ்இ மண்டல அலுவலகங்களை ஜனவரி 7ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு வருகைப் பதிவுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு சமர்ப்பிக்கும் ஆவணங்கள் ஏற்கப்படமாட்டாது.

No comments:

Post a Comment

Join Our Telegram Group