பொங்கல் பண்டிகைக்கான ஐந்து நாள் தொடர் விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டுள்ளது.
பெரு நகரங்களில் வசிப்பவர்கள், வெளியூர்களில் வசிப்பவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று, பொங்கலைசிறப்பாக கொண்டாடி உள்ளனர்.இதற்காக, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, ஜனவரி 15 முதல், நேற்றுவரை, ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை நேற்று முடிந்த நிலையில், பள்ளி, கல்லுாரிகள் இன்று மீண்டும் திறக்கப் படுகின்றன.
இந்நிலையில், இன்று முதல், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வு மாணவர்களுக்கு, திருப்புதல் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும், மற்ற வகுப்புகளுக்கு மூன்றாம் பருவ தேர்வுகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment