பாரத பிரதமர் மாணவர்களுடன் உரையாற்றும் நேரடி ஒளிபரப்பு ( Live YouTube Channel Link ) - KALVISEITHI | கல்விச்செய்தி

Sunday, 19 January 2020

பாரத பிரதமர் மாணவர்களுடன் உரையாற்றும் நேரடி ஒளிபரப்பு ( Live YouTube Channel Link )

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

Pariksha Pe Charcha 2020 என்ற மாணவர்களின்  தேர்வுபயம் போக்கும்  நிகழ்ச்சி தொடர்ந்து 3 வது வருடமாக 20.01.2020 அன்று டெல்லி Talkatora மைதானத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியினை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காண்பித்து , இந்நிகழ்ச்சியைக் கண்டு களித்த மாணாக்கர் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பின்னூட்டம் ( Feedback) போன்ற தகவல்களை உள்ளடக்கிய புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றைத் தொகுத்து தலைமையாசிரியர்கள் அறிக்கையாக அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Prime Minister Speech - Live YouTube Link...

பொது தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும்வகையில், பிரதமர் மோடி இன்று ஊக்க உரை நிகழ்த்துகிறார். இந்த உரையை, அரசு பள்ளி மாணவர்கள் கேட்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களின் கேள்வி கள் மற்றும் சந்தேகங்களுக்கு, பிரதமர் மோடி பதில் அளிக்கிறார்.இதற்காக, பிரதமரிடம் கேள்வி கேட்கும் மாணவர்கள், தனியாகதேர்வு செய்யப் பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி, 'டிவி' மற்றும் சமூக வலைதளங்களில், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

1 comment:

Join Our Telegram Group