இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு தனித் தேர்வர்கள் மார்ச் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத் துறை அறிவிப்பு - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday, 18 March 2020

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு தனித் தேர்வர்கள் மார்ச் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத் துறை அறிவிப்பு

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here



தனித்தேர்வர்கள் அரசு தேர்வுத்துறையின் இணைய தளத்தில் (www.dge.tn.gov.in) விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்.அத்துடன் ஏற்கெனவே தேர் வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல் களையும் இணைத்து தங்கள் இருப் பிடத்துக்கு அருகே உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறு வனத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் வெப்-கேமரா வசதி இருப்பதால் அங்கேயே புகைப் படத்துடன் கூடிய விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து தேர்வுக் கட் டணத்தையும் செலுத்திவிடலாம்.

தேர்வுக் கட்டணம் ஒரு பாடத் துக்கு ரூ.50, மதிப்பெண் சான்றி தழ் (முதல் ஆண்டு) ரூ.100, மதிப் பெண் சான்றிதழ்(2-ஆம் ஆண்டு) ரூ.100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50.ஆன்லைன் விண்ணப்பங்களை மார்ச் 30 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். தபால் வழியாக பெறப்படும் விண்ணப் பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப் படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group