தங்கம் விலை வீழ்ச்சி.. அதுவும் மூன்றாவது நாளாக.. இன்னும் குறையுமா.. இப்போது வாங்கலாமா! - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday 1 April 2020

தங்கம் விலை வீழ்ச்சி.. அதுவும் மூன்றாவது நாளாக.. இன்னும் குறையுமா.. இப்போது வாங்கலாமா!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here
தங்கம் விலை வீழ்ச்சி.. அதுவும் மூன்றாவது நாளாக.. இன்னும் குறையுமா.. இப்போது வாங்கலாமா!

நாட்டில் கொரோனாவின் தாக்கம் மணிக்கு மணி அதிகரித்து வரும் நிலையில், நாங்கள் தான் பொருளாதாரத்தில் முதன்மை. நாங்கள் தான் வல்லரசு நாடுகள் என கூறிய நாடுகள் கூட இன்று கொரோனா தாக்கத்திலும் முதன்மை நாடுகளாக உள்ளன.

இதனால் அந்த நாடுகளின் பொருளாதாரம் படுத்து விடுமோ என்ற பயத்தினால், பல பொருளாதாரத்தினை முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன அந்த நாடுகளின் அரசுகள்.

குறிப்பாக சொல்லவேண்டுமானால் அமெரிக்கா உலகளவில் கொரோனா தாக்கத்தில் முதன்மை நாடாக தற்போது உருவெடுத்துள்ளது. இதனால் அமெரிக்கா பல ரீலிப் பேக்கேஜ்களை அறிவித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 150 லட்சம் கோடி ரூபாய் நிதியினை, மக்களை கொரோனா தாக்கத்திலிருந்து பாதுக்காக்க அமெரிக்க அரசு கையெழுத்திட்டது.

இந்திய மக்களை காப்பாற்ற ரூ500 கோடி.. கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற களம் இறங்கிய முகேஷ் அம்பானி!
மூன்றாவது நாளாக குறையும் தங்கம் விலை

இதனால் அமெரிக்கா டாலரின் மதிப்பும் சற்று அதிகரித்துள்ளது. மேலும் சர்வதேச சந்தைகளும் சற்று அதிகளவு மாற்றம் இல்லாமல் வர்த்தகமாகி வருகின்றன. இதனால் தங்கம் விலை தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக குறைந்து வருகின்றது. எனினும் ஒரு புறம் கொரோனாவினால் உலகளாவிய லாக்டவுனால் பொருளாதாரம் என்ன ஆகுமோ என்ற கவலையும் இருந்து வருகின்றன. ஆக இதன் தாக்கம் குறைந்த மட்டத்தில் தங்கத்திற்கு மேலும் ஆதரவளிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை குறையலாம்

இது ஒரு புறம் எனில், மறுபுறம் அதிகளவில் தங்கத்தினை பயன்படுத்தப்படும் இந்தியாவில், 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால், தேவை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் இந்திய மக்களின் கையில் பணப்புழக்கம் குறைந்துள்ளதோடு, அத்தியாவசியம் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதிலும் தற்போது நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் மக்கள் அத்தியாவசியம் தவிர வேறு எதிலும் முதலீடுகளை தவிர்த்தும் வருகின்றனர்.
ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்

அதிலும் தற்போது 21 நாட்கள் அமலில் இருக்கும் இந்த ஊரடங்கு நிச்சயம் இந்த 21 நாளில் முடிவடையாது என்றும் கருதப்படுகிறது. மேலும் ஏப்ரல் இறுதி வரைக்கும் நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளில் கவனமாக இருந்து வருகிறார்கள். இதனால் நீண்ட காலத்திற்கு இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது.
சர்வதேச சந்தையில் விலை

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது இரண்டாவது நாளாக குறைய ஆரம்பித்துள்ளது. நேற்றைய முடிவு விலையானது அவுன்ஸூக்கு 1643.20 டாலராகும். இதே இன்றைய தொடக்கத்தில் 1638.05 டாலராக தொடங்கிய நிலையில், தற்போது அவுன்ஸூக்கு 5 டாலர்கள் குறைந்து 1,638.20 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தையினை பொறுத்த வரை இது இரண்டாவது நாள் வீழ்ச்சியாகும்.
எம்சிஎக்ஸில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் பெரிய அளவில் தங்கம் விலையில் மாற்றம் இல்லை என்றே கூறலாம். தற்போது தங்கம் விலையானது 9 ரூபாய் அதிகரித்து 43,400 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் இன்று காலையில் தொடக்கத்தில் 0.35% வீழ்ச்சி கண்டு 10 கிராம் தங்கத்தின் விலையானது 43,232 ரூபாய் வரை மூன்றாவது நாளாக வீழ்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று குறைந்திருந்தாலும், வெள்ளி விலையானது குறையவில்லை எனலாம். ஏனெனில் வெள்ளியின் விலையானது இன்று 1.27% அதிகரித்து 14,312 டாலராக வர்த்தகமாகி வருகிறது. கடந்து இரண்டு தினங்களாகவே வீழ்ச்சி கண்ட வந்த வெள்ளியின் விலையானது, தற்போதைய நிலையில் விலை சற்று அதிகரித்துள்ளது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளியின் விலையானது, இந்திய எம்சிஎக்ஸ் சந்தையில் 342 ரூபாய் அதிகரித்து, 40,142 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்தவரை வெள்ளியின் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது சற்று அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.
தங்க ஆபரணம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது வழக்கம் போல பெரிதும் மாற்றம் இல்லாமல் தான் உள்ளது. இந்தியாவில் லாக்டவுனால் தங்க ஆபரணத்தின் விலையில் பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், கிராமுக்கு (22 கேரட்) 3,953 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 31,624 ரூபாயாகவும் உள்ளது.
ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளியின் விலையும் பெரிதும் மாற்றம் இல்லாமல் தான் உள்ளது. எனினும் கிராமுக்கு 39.51 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 39,510 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இதே நேற்று கிலோ வெள்ளியின் விலை 39,500 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Join Our Telegram Group