இந்த மாநிலத்தில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது . - KALVISEITHI | கல்விச்செய்தி

Thursday, 25 June 2020

இந்த மாநிலத்தில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது .

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here
இந்த மாநிலத்தில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது .

கொரோனா அட்டகாசத்துக்கு இடையே, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு இன்று துவங்குகிறது. 8 லட்சத்து, 48 ஆயிரத்து, 23 மாணவ -- மாணவியர் தேர்வு எழுத தயாராகின்றனர். 

10 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டது.கர்நாடகத்தில் கொரோனா, ஒவ்வொரு இடமாக பரவுகிறது. மாணவ - மாணவியரின் நலனுக்காக, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை ரத்து செய்யும்படி, பல தரப்பிலிருந்தும் நெருக்கடி வந்தது.

ஆனால், மாநில தொடக்க கல்வித் துறை அமைச்சர் சுரேஷ்குமார், தேர்வு நடத்தியே ஆக வேண்டுமென பிடிவாதத்துடன் இருந்தார். இன்று மாநிலம் முழுவதும், தேர்வு துவங்குகிறது.

தேவையான முன்னெச்சரிக்கை, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து தேர்வு மையங்களி பல்வேறு வழிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

 இதனை தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. .

ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்த பின், கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படும் இதற்கிடையில், 10 மாணவர்களுக்கு, கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் தேர்வு எழுத முடியாது. இப்போது தேர்வு எழுத முடியாதவர்களுக்கு ஆகஸ்டில் வாய்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Join Our Telegram Group