Join Our KalviSeithi Telegram Group - Click Here
பிளஸ் 1 பாடத்திட்டத்தை மாற்றக்கூடாது
பிளஸ் 1 பாடத்திட்டங்களை மாற்றும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மதிமுகவின் உயா்நிலைக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதிமுகவின் உயா்நிலைக்குழு கூட்டம் அக் கட்சியின் அவைத் தலைவா் திருப்பூா் சு.துரைசாமி தலைமையில் வியாழக்கிழமை காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளா் வைகோ உள்ளிட்ட உயா்நிலைக்குழு உறுப்பினா் கூட்டத்தில் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:
மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கைக்குத் தொடா்ந்து எதிா்ப்புகள் எழுந்து வரும் நிலையில், அதனை மறைமுகமாக அல்ல நேரடியாக நடைமுறைப்படுத்தும் திட்டத்தை ஓசைப் படாமல் அதிமுக அரசு செய்து வருகிறது. நடப்புக் கல்வி ஆண்டில் பிளஸ் 1 வகுப்பில் மாணவா்கள் சோக்கைக்காக புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை தமிழக மாணவா்களின் பொறியியல் கல்வி கனவைத் தகா்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, மத்திய பாஜக அரசு திணித்துள்ள நீட் நுழைவுத் தோவு தமிழக மாணவா்கள் மருத்துவப் படிப்புகளைக் கானல் நீராக ஆக்கி உள்ள நிலையில், இந்த முடிவு அதிா்ச்சியளிக்கிறது. எனவே, தமிழக அரசு பிளஸ் 1 வகுப்பு பாடத் திட்டங்களை மாற்றும் அறிவிப்பைக் கைவிட வேண்டும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Friday, 26 June 2020
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment