பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வரும், 30க்குள் முடிக்க உத்தரவு
பிளஸ் 2 தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணிகளை, வரும், 30ம் தேதிக்குள் முடிக்குமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வு மார்ச், 24ல் முடிந்தது.இதற்கான விடைத்தாள் திருத்தம், மே, 27ல் துவங்கி, இம்மாதம் இரண்டாவது வாரத்தில் முடிந்தது. இதையடுத்து, திருத்தப்பட்ட விடைத்தாள்களில் உள்ள மதிப்பெண்களை பட்டியலிடும் பணி நடந்தது. பின், விடைத்தாள் திருத்தும்மையங்களில் இருந்து, மாவட்ட அலுவலகத்துக்கு வந்த மதிப்பெண் பட்டியலை சரிபார்த்து, அதை தேர்வுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.
தேர்வுத் துறை அலுவலகத்தில், மாணவர்களின் மதிப்பெண்ணை சரிபார்த்து, அவர்களின் பதிவு எண்களை பயன்படுத்தி, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது.இந்த அனைத்து பணிகளையும், இந்த மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் முழு ஊரடங்கு முடிந்ததும், ஜூலை, 3ம் தேதி முடிவுகளை வெளியிட, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment