நாளை முதல் ஜூன் 30 வரை மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்குத் தடை: முதல்வர் - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday, 24 June 2020

நாளை முதல் ஜூன் 30 வரை மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்குத் தடை: முதல்வர்

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

நாளை முதல் ஜூன் 30 வரை மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்குத் தடை: முதல்வர்


கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாளை (வியாழக்கிழமை) 30-ஆம் தேதி வரை மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (புதன்கிழமை) மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி அவர் பேசியதாவது:

"தீவிரமாக செயல்பட்டதன் காரணத்தினால், கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம்.சென்னையில் மக்கள் மிகவும் நெருக்கமாக வசிப்பதால், இங்கு கரோனா எளிதில் பரவுகிறது. வீடு வீடாகச் சென்று காய்ச்சல், தொண்டை வலி இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளடங்கிய 15 கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 6 அமைச்சர்களும் தொற்று பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

சென்னையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படுகின்றன. மேலும் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அவர்களது தேவைக்கேற்ப அனைத்துப் பொருள்களும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே நடமாடும் மருத்துவமனைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மண்டலங்களுக்கிடையிலான போக்குவரத்து காரணமாக கரோனா பரவுவதாகத் தெரிவித்தனர். இதன் காரணமாக மண்டலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு நாளை முதல் ஜூன் 30 வரை 5 நாள்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. மாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் ஈ-பாஸ் வாங்கிக்கொண்டுதான் மாவட்டங்களுக்கிடையே பயணிக்க வேண்டும்.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், பரவைடவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்குட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்து பகுதிகளிலும்,

நோய்த் தொற்று நிலையை கருத்தில் கொண்டு, சென்னையில்அமல்படுத்தியதுபோல் 24.6.2020 அன்று அதிகாலை
0.00 மணிமுதல் 30.6.2020 அன்று நள்ளிரவு 12.00 மணிவரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு சமயத்தில் ஏழை எளிய மக்ளின் சிரமங்களை குறைக்க, சென்னையில் வழங்கியது போல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் குடும்பத்திற்கு தலா 1,000 ரூபாய் வழங்கவும் அதை செயல்படுத்தும் விதமாக, வரும் 27.6.2020 முதல் சம்மந்தப்பட்ட துறையினர் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கேசென்று, ரொக்க நிவாரணத்தை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்."

No comments:

Post a Comment

Join Our Telegram Group