திருமணத்தில் 50க்கும் மேற்பட்ட விருந்தினர்.திருமண வீட்டாருக்கு ரூ. 6 லட்சம் அபராதம்! - KALVISEITHI | கல்விச்செய்தி

Sunday, 28 June 2020

திருமணத்தில் 50க்கும் மேற்பட்ட விருந்தினர்.திருமண வீட்டாருக்கு ரூ. 6 லட்சம் அபராதம்!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here திருமணத்தில் 50க்கும் மேற்பட்ட விருந்தினர்.திருமண வீட்டாருக்கு ரூ. 6 லட்சம் அபராதம்!

அரசின் விதிமுறைகளை மீறி திருமண விழாவுக்கு 50க்கும் அதிகமான விருந்தினர்களை அழைத்த குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ், மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டது என்றே கூறலாம். முகக்கவசம், சமூக இடைவெளி நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாகியுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் குறைவான நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் திருமண கொண்டாட்டத்திற்கு பிறகு பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்.

ஜூன் 13ம் தேதி நடைபெற்ற இந்த திருமண விழாவில் 50க்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அதன்பிறகு அவர்களில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த சம்பவம் காவல்துறையினரின் கவனத்துக்கு சென்றுள்ளது. இதனையடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

அரசின் வழிகாட்டுதல்களை மீறி அதிக நபர்களை திருமண விழாவுக்கு அழைத்த காரணத்திற்காக குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தினர்களை தனிமைப்படுத்துவதற்கான வசதி, மருத்துவ பரிசோதனை, உணவு மற்றும் ஆம்புலன்ஸ் ஏற்பாடு உள்ளிட்டவற்றிற்கு மாநில அரசுக்கு ரூ. 6,26,600 இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை ஈடு செய்ய திருமண நிகழ்ச்சியை நடத்திய குடும்பத்தினர் அந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group