Join Our KalviSeithi Telegram Group - Click Here
இந்தியாவில் கொரோனா தொற்று. 5 லட்சத்தைத் தொடும் நிலையில்!
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,73,105லிருந்து 4,90,401 ஆக அதிகரித்துள்ளது இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தொடும் நிலையில் உள்ளது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது இருப்பினும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் 2,71,697லிருந்து 2,85,637 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரம், கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,894லிருந்து 15,301 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதித்த 1,89,463 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை. அளிக்கப்பட்டு வருகிறது
இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவு 17,296 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனாவால் 407 பேர் உயிரிழந்துள்ளனர்; 13,940 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
புதுச்சேரியில் மேலும் 31 பேருக்கு கொரோனா. புதுச்சேரியில் ஒரேநாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 533 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 17,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்து 401 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 85 ஆயிரத்து 636 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும், 13,940 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 407 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 301 ஆக அதிகரித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் அதிக பாதிப்புக்கு உள்ளானது. இதுவரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 1,47,741 என்றும், உயிரிழப்பு எண்ணிக்கை 6,931 என்றும் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அடுத்து, தில்லியில் - பாதிப்பு: 73,780 - உயிரிழப்பு: 2,429 என்றும், தமிழகத்தில் பாதிப்பு 70,977 என்று உயிரிழப்பு 911 என்றும் உள்ளது.
குஜராத் - 29,520 -1,753
உ.பி.,- 20,193 - 611
ராஜஸ்தான்-16,296 - 379
மேற்கு வங்கம்- 15,648 - 606
ம.பி.,- 12,596 - 542 - என கொரோனா பாதிப்பு உள்ளது.
Friday, 26 June 2020
Home
Unlabelled
இந்தியாவில் கொரோனா தொற்று. 5 லட்சத்தைத் தொடும் நிலையில்!
இந்தியாவில் கொரோனா தொற்று. 5 லட்சத்தைத் தொடும் நிலையில்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment