கிட்னியில பிரச்சினை இருக்கறவங்க சிக்கன் சாப்பிடலாமா? சாப்பிட்டா என்ன ஆகும்? - KALVISEITHI | கல்விச்செய்தி

Monday, 22 June 2020

கிட்னியில பிரச்சினை இருக்கறவங்க சிக்கன் சாப்பிடலாமா? சாப்பிட்டா என்ன ஆகும்?

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here கிட்னியில பிரச்சினை இருக்கறவங்க சிக்கன் சாப்பிடலாமா? சாப்பிட்டா என்ன ஆகும்?

சிறுநீரக நோயாளிகள் சிக்கனை சாப்பிடுவதால் சிறுநீரகம் மேலும் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. இதற்கு காரணம் சிக்கனில் உள்ள அதிகப்படியான சோடியம். எனவே சிறுநீரக நோயாளிகள் சிக்கனை எப்படி சாப்பிட வேண்டும் மேலும் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என அறிந்து கொள்வோம்.
 

நம் உடலில் உள் உறுப்புகள் சரியாக செயல்படாத போது சீரான உணவை உட்கொள்வது அவசியம் ஆகிறது. அந்த வகையில் பார்க்கும் போது உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால் எடுத்துக் கொள்ளும் உணவில் கவனம் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் தற்போதைய பாஸ்ட் ஃபுட் உலகில் சிக்கன் இல்லாமல் இருக்க முடிவதில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிக்கன் ரெசிபிகளுக்கு அடிமையாக இருக்கின்றனர். வீட்டில் சும்மா டீவி பார்க்கும் போது கூட சிக்கன் 65, சிக்கன் பக்கோடா போன்ற நொறுக்கு தீனிகள் மக்களுக்கு தேவைப்படுகிறது.


​சிக்கன் சாப்பிடுவது நல்லதா?


இப்படி எல்லோரும் சிக்கனை சாப்பிடலாமா. சிறுநீரக நோயாளிகள் தொடர்ந்து சிக்கன் சாப்பிட்டு வந்தால் என்ன பிரச்சினை ஏற்படும். ஏனெனில் சிறுநீரகம் தான் நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விட்டு வடிகட்டிய இரத்தத்தை உள் உறுப்புகளுக்கு பாய்ச்சுகிறது. ஒரு வேளை உங்க சிறுநீரகங்கள் சேதமடைந்து விட்டால் என்ன நடக்கும். இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படாமல் அங்கயே தங்கி விடும். எனவே சிறுநீரக நோயாளிகள் எப்பொழுதும் பாதுகாப்பான உணவை எடுத்துக் கொள்வது அவசியம்.
​சிறுநீரக நோய்கள்


சிறுநீரக நோய்களை 3 வகைகளாக பிரிக்கின்றனர்

கடுமையான சிறுநீரக கோளாறுகள்

இந்த நோயால் உங்க சிறுநீரகம் திடீரென செயலிழந்து விடும்.

நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகள்

இந்த பாதிப்பு நீண்ட காலத்திற்கு ஏற்படும். கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீரகம் பாதிப்படைந்து கொண்டே வரும். நீங்கள் உடனே சிகிச்சை பெறா விட்டால் முழுமையாக சிறுநீரகம் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது
​பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்


இது மரபணு மற்றும் பெற்றோர்களிடம் இருந்து வரக்கூடிய நோயாகும்.

சிறுநீரக நோயாளிகள் உணவை தேர்ந்தெடுக்கும் போது பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது.
​சோடியம் மற்றும் உப்பு அதிகம் இல்லாத உணவுகள்


சிறுநீரக நோயாளிகள் இரத்த அழுத்தம் என்ற பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நம்முடைய உடலானது சோடியம் மற்றும் உப்பின் அளவு 2000 மி. கி வரை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். அதற்கு மேல் உணவில் சேர்க்கும் போது உப்பு மற்றும் சோடியத்தை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகம் செயலிழக்க நேரிடலாம்.

பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களில் சோடியம் மற்றும் உப்பு அதிகமாக இருக்கும். எனவே முடிந்த வரை ப்ரஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுங்கள். அதே மாதிரி உணவில் கூட கல் உப்பை பயன்படுத்துங்கள். அதே எந்த பாக்கெட் உணவுகள் வாங்கினால் கூட அதில் இருக்கும் சோடியம் அளவை பார்த்து வாங்குங்கள். குறைந்த சோடியம் அளவுள்ள உணவை தேர்ந்தெடுங்கள்.
​சரியான புரோட்டீன் உணவுகள் அவசியம்


சிறுநீரக நோயாளிகள் சிக்கன் சாப்பிடுவதற்கு முன்பு கொஞ்சம் யோசியுங்கள். ஏனெனில் ஒவ்வொரு சிறுநீரக பாதிப்பும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நபருக்கு நபர் வேறுபடுகிறது. எனவே புரோட்டீன்கள் நிறைந்த சிக்கன்களை அதிகளவில் எடுத்துக் கொள்ளும் போது உங்க சிறுநீரகம் அதை வடிகட்ட அதிக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. எனவே சிறுநீரக நோயாளிகள் குறைந்த புரதம் உள்ள உணவுகளை உண்பதே சிறந்தது.
​விலங்குகளின் புரதம் - சிக்கன்


சிக்கனைப் பொருத்தவரை தோலில்லாத சிக்கன் நெஞ்சுக் கறியை தேர்ந்தெடுங்கள். தோலில்லாத சிக்கனில் குறைந்த அளவு சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. அதே நேரத்தில் தோல் உள்ள சிக்கனின் நெஞ்சுக் கறியில் சிறுநீரகத்தை பாதிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

84 கிராம் சிக்கன் நெஞ்சுக் கறியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

சோடியம் 63 மி. கி

பொட்டாசியம் 216 மி. கி

பாஸ்பரஸ் 192 மி. கி
​மீன் மற்றும் சிவப்பு இறைச்சி


சிறுநீரக நோயாளிகள் மீன் மற்றும் சிவப்பு இறைச்சியை தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மீனில் உள்ள அதிகப்படியான சோடியம் மற்றும் சிவப்பு இறைச்சியிலுள்ள கொழுப்பும் உங்களுக்குக் கொஞ்சம் ஆபத்து தான்.
​முட்டை


முட்டையில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. எனவே சிறுநீரக நோயாளிகள் முட்டை சாப்பிட நினைத்தால் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடுங்கள். ஏனெனில் முட்டையின் மஞ்சள் கருவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் சோடியம் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது. எனவே அது உங்க சிறுநீரகத்தை மேலும் பாதிக்க வாய்ப்புள்ளது.

பால் மற்றும் பால் பொருட்கள்

பாலில் கால்சியம், புரோட்டீன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே சிறுநீரக நோயாளிகள் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
​தாவர வகையிலான புரோட்டீன் உணவுகள்


பீன்ஸ்

நட்ஸ்

தானியங்கள்

பயிறு வகைகள்

எனவே இந்த வகை புரோட்டீன் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் உங்க சிறுநீரக மருத்துவரின் ஆலோசனை பேரில் எடுத்துக் கொள்ளுங்கள்.
​இதய மற்றும் சிறுநீரகத்தை பலப்படுத்தும் உணவுகள்


நம் உடலை இரத்தத்தை வடிகட்டி சுத்தம் செய்யும் வேலையில் சிறுநீரகம், இதயம் இரண்டும் செயல்படுவதால் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நமது கடமை. எனவே இந்த இரண்டு உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க சில உணவுகளின் பட்டியல் இதோ.
​இருதய ஆரோக்கியத்திற்கான உணவுகள்


க்ரில்டு உணவுகள்

வேகவைத்த உணவு

வறுக்கப்பட்ட உணவுகள்

ப்ரைடு உணவுகள்

ஆலிவ் ஆயில் மற்றும் விளக்கெண்ணெய்

தோலில்லாத சிக்கன் மற்றும் டூனா மீன்

கல் உப்பு மற்றும் மிளகு

காய்கறிகள் மற்றும் பழங்கள்

குறைந்த கொழுப்பு பால்

முட்டையின் வெள்ளை கரு

பாஸ்பரஸ் குறைவான உணவுகளை உண்ணுங்கள்

அதிக பாஸ்பரஸ் கொண்ட உணவுகள் உங்க இருதயம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்கும். அதே நேரத்தில் உங்க எலும்புகளையும் இரத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

ப்ரஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டுமே உண்ணுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் வேண்டாம்.

தவிடு தானியங்கள் மற்றும் ஓட்ஸிற்கு பதிலாக ரொட்டி, வேக வைத்த அரிசி சாதம் மற்றும் பாஸ்தாவிற்கு மாறுங்கள்.

பாலுக்குப் பதிலாக அரிசி கஞ்சி அருந்துங்கள்

செயற்கை பானங்கள் மற்றும் சோடா பானங்களுக்கு பதிலாக க்ரீன் டீ, லெமனேடு குடியுங்கள்.

எனவே சிறுநீரக நோயாளிகள் இனியாவது சிக்கனை அப்படியே சாப்பிடாமல் தோலிரித்து சாப்பிடுங்கள். ஆலிவ் ஆயில் மற்றும் விளக்கெண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்துங்கள். சிவப்பு இறைச்சியை தவிருங்கள்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group