ஒரு நாளில் 10 மணிநேரத்திற்கும் மேலாக தூங்குபவர்களுக்கு ஆபத்து அதிகமாக உள்ளது
ஒரு மனிதனின் உடல்நலத்துக்கு போதுமான தூக்கம் அவசியம் என்பதை எப்போழுதும் சுகாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.போதுமான தூக்கம் இல்லை என்றாலோ அதிகமான தூக்கத்தாலோ நமது உடல் சீரழிகிறது என்ற உண்மையை புதிய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. Seoul National University College of Medicine ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு ஆறு மணி நேரம் தூங்காமலிருக்கும் மனிதர்களுக்கு நீரிழிவு, இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் இளம் வயது மரணம் போன்ற நோய்களை சந்திப்பதாக கூறுகிறது. ஆய்வின் படி, ஒரு நாளில் 10 மணிநேரத்திற்கும் மேலாக தூங்குபவர்களுக்கு ஆபத்து அதிகமாக உள்ளது. 40 மற்றும் 69 வயதிற்கு இடையிலான 130,000 கொரிய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து எடுக்க பட்ட மருத்துவ தகவல்களைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.இந்த ஆய்வு 6 மணி நேரம் குறைவாகவோ அல்லது 10 மணிநேரத்திற்கு அதிகமாகவோ தூங்குவாதல் மெட்டபாலிக் நோய்கள் வரும் என்று கூறுகிறது.ஆராய்ச்சியாளர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்குவதே உகந்த தூக்கம் என்று கூறுகின்றனர்.வளர்ச்சிதை மாற்றம் என்று சொல்லப்படும் மெடபாலிக் சின்ரோமால் உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு,இடுப்பு பகுதியில் அதிகமாய் சேரும் சதைகள் என பல நோய்கள் ஏற்படுகிறது. ஆராய்சியின் மாதிரி அளவுகளிலிருந்து,11% ஆண்கள் மற்றும் 13% பெண்கள் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவதாகவும், 1.5% ஆண்களும் 1.7% பெண்களும் 10 மணிநேரத்திற்கும் மேலாக தூங்குகிறார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
முன்னணி ஆசிரியரான கிளாரி E கிம்(Claire E. Kim) ஆய்வின் முடிவுகளை பற்றி பேசியது, "தூங்குகின்ற காலம் மற்றும் மெடபாலிக் சின்ரோம் மற்றும் அதன் கூறுபாடுகளை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையில் தனித்தனியாக நடத்திய மிகப்பெரிய ஆய்வு இது.இந்த ஆராயிச்சியில் நாங்கள் தூங்குகின்ற நேரம் மற்றும் மெடபாலிக் சின்ரோமிலுள்ள பாலின வேறுபாடுகளை கவனித்தோம். இதன் முலம் பெண்களின் அதிக நேரத் தூக்கம் மற்றும் மெடபாலிக் சின்ரோமும், ஆண்களின் குறைவானத் தூக்கம் மற்றும் மெடபாலிக் சின்ரோமும் தொடர்புடையது என்பது கண்டறியப்பட்டது.
நீங்கள் போதுமான தூக்கம் கிடைக்காதவராயிருந்தால், நீங்கள் நன்றாக தூங்குவதற்கு உதவும் சில உணவுகள்.
சூடான பால்(warm milk)
பல மக்கள் சூடான பாலை குடிப்பதால் இரவு நேரங்களில் நல்ல தூக்கத்தை பெறுகின்றனர்.
செர்ரிகள் (cherries)
ஒரு கிண்ணம் செர்ரிகள் உங்கள் மூளையை மெலடோனின் உற்பத்தி செய்ய உதவுகிறது, இது உங்கள் தூக்கச் சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது.
ஆளி விதைகள்(Flaxseeds)
ஆளிவிதைகளில் காணப்படும் டிரிப்டோபான் கவலை மற்றும் மன அழுத்தத்தைத் தடுக்கிறது, இது நீண்ட நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
வாழைப்பழம் (banana)
இவை நல்ல உணவாகவும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துகளை கொண்டதாகவுமிருந்து தசைகளை ரிலக்ஸ் செய்கிறது.
பாதாம் (almonds)
இவை நல்ல இனிமையான தூக்கத்துடன் தொடர்புடைய மெக்னீசியம் கொண்டவை.
No comments:
Post a Comment