அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் முழு செலவையும் அரசே ஏற்கும்!
அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், முழு செலவையும் தமிழக அரசே ஏற்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு இம்மாத இறுதிக்குள் காலாவதியாகவிருந்தது. இந்தநிலையில், அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்படடுள்ளது. கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், மருத்துவக் காப்பீட்டைப் பயன்படுத்தி சிகிச்சை பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டள்ளது
No comments:
Post a Comment