வீட்டிலிருந்து பணிபுரிவதால் ஏற்படும் உடல் தொந்தரவுகளை தவிர்ப்பது எப்படி?
கொரோனா பரவல் காரணமாக இன்று பெரும்பாலான பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். வீட்டிலிருந்து பணிபுரிவது ஒரு விதமான சுகத்தை அளித்தாலும் இன்னொரு பக்கம் அலுவலகத்தில் கிடைக்கும் சில வசதிகள் வீட்டில் இல்லாதது பணியாளர்களுக்கு சில தொந்தரவுகளை அளித்து வருகிறது.
வீட்டிலிருந்து பணியாற்றும் பெரும்பாலான பணியாளர்கள் மடிக்கணினி மூலம் பணியாற்றுவதால் அவர்கள் சந்திக்கும் தலையாய பிரச்னைகளாக முதுகு வலி, கழுத்துவலி, கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது தலைத்தூக்கி நிற்கின்றன. ஆகவே இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்த விளக்கங்களை Dr.s.Mohan kumar M.s.Ortho.,D.ortho அவர்களிடம் கேட்டோம்.
அவர் அளித்த விளக்கங்கள் பின்வருமாறு:-
ஊரடங்கு காலத்தில் பணியாளர்கள் அதிகம் சந்திக்கும் பிரச்னைகளாக கழுத்து மற்றும் முதுகு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் மாறியிருக்கிறதே?
உண்மைதான். அதற்கு மிக முக்கியமான காரணம் பணியின்போது உபகரணங்களை அவர்கள் பயன்படுத்தும் முறை. பெரும்பாலான பணியாளர்கள் மடிக்கணியை மடியில் வைத்தோ, அல்லது கட்டிலில் வைத்தோ பயன்படுத்துகின்றனர். இந்தப் பணி முறை நிச்சயம் அவர்களுக்கு பிரச்னைகளை உண்டாக்கும். ஆகவே அதனை தவிர்த்து மடிக் கணினியானாது சரியாக நமது கண் புள்ளிக்கு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நாம் கழுத்து சம்பந்தமான பிரச்னைகளை தவிர்க்கலாம்.
இன்னொன்று நாற்காலி... அவர்கள் அமர்ந்திக்கும் நாற்காலி 90 டிகிரி அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இது மட்டுமன்றி அந்த நாற்காலி பின் சாய்வு வசதி கொண்ட நாற்காலியாக இருத்தல் மிக முக்கியமானது. பின் சாய்வு இல்லாத நாற்காலிகளை நாம் பயன்படுத்தும்போது நிச்சயம் நமக்கு முதுகு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரும்.
மேலும் தொடர்ந்து எட்டுமணி நேரம் ஒரே இடத்தில் பணியாற்றும் நபர்கள் 40 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து சென்று ஒரு ஐந்து நிமிடம் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் அவர்கள் இன்னும் சுறுசுறுப்பாக பணியாற்ற முடியும்.
(முதுகு வலிக்கான பயிற்சிகள்) ( கழுத்துவலிக்கான பயிற்சிகள் )
இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் கண். தொடர்ந்து 8 மணி நேரம் மடிக்கணினியை பார்த்துக் கொண்டிருக்கும் நாம் ஒரு குறிப்பிட்ட அசைவுகளில் மட்டுமே கண்களை பயன்படுத்துகிறோம். அப்படி பயன்படுத்தும்போது கண்களில் உள்ள தசைகள் இறுகி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனாலும் கண் சம்ந்தப்பட்ட பிரச்னைகள் வரும். ஆகவே கண்களுக்கு நாம் சில பயிற்சிகளை கொடுப்பது மிக அவசியமானதாக இருக்கிறது.
( கண் வலிக்கான பயிற்சிகள் )
ஊரடங்கு காலத்தில் உடற்பயிற்சி அவசியமா?
உடற்பயிற்சி என்பது அவசியம்தான்.

ஆனால் கடினமான உடற்பயிற்சிகளை தவிர்த்துக் கொள்ளலாம். மிக எளிய, அதே நேரம் உடலின் எல்லா பாகங்களுக்கும் அசைவு கொடுக்கக் கூடிய உடற்பயிற்சிகளை செய்தால் போதுமானது. இன்னொரு விஷயம் இந்த ஊரடங்கு காலத்தில் நாம் வெளியே செல்வதை தவிர்த்து வருகிறோம். இதனால் சூரியஒளி என்பது நம் உடலில் படும் நேரமானது வெகுவாக குறைந்துள்ளது. அதனால் நமக்கு வைட்டமின் டி இழப்பு ஏற்படுகிறது. இதனால் நமது எலும்புகளுக்கு போதிய போஷாக்கு கிடைக்காமல் போகிறது.
ஆகவே அதனை நாம் உணவின் மூலம் பெற வேண்டும். சைவ உணவுகளை பொருத்தவரையில் சிறுதானிய வகைகளை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக ராகியை எடுத்துக் கொள்ளலாம். மேலும் எள் உருண்டை, பால், ஆரஞ்சு பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை பொருத்தவரை ஆட்டு இறைச்சி எடுத்துக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment