சத்துணவுக்கான மூன்று மாத தொகை பெற்றோரிடம் பணமாக விரைவில் வழங்கப்படும் என தகவல் - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday, 24 June 2020

சத்துணவுக்கான மூன்று மாத தொகை பெற்றோரிடம் பணமாக விரைவில் வழங்கப்படும் என தகவல்

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here
சத்துணவுக்கான மூன்று மாத தொகை பெற்றோரிடம் பணமாக விரைவில் வழங்கப்படும் என தகவல்

பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கான, மூன்று மாத செலவு தொகை, பெற்றோரிடம் பணமாக விரைவில் வழங்கப்படும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 43 ஆயிரம் சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. அங்கு, 50 லட்சம் மாணவ, மாணவியருக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. 

கடந்த மார்ச், 16 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், சத்துணவு மையங்கள் மூடப்பட்டுள்ளன. மார்ச்சில் விடுபட்ட நாட்கள், ஏப்ரல் மற்றும் கோடை விடுமுறை காலமான மே மாதத்தில், பள்ளிகள் செயல்படாத நாட்களுக்கு, சத்துணவுக்கான செலவு தொகையை, விரைவில் பெற்றோரிடம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, சத்துணவு திட்ட அலுவலர்கள் கூறியதாவது:

 பள்ளிகள் செயல்படாத நாட்களுக்கு, உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி உலர் உணவு பொருட்களான அரிசி, பருப்பு, கொண்டைக்கடலை, பச்சை பயறு, முட்டை ஆகியவற்றுக்கான செலவு தொகையையும், உணவூட்டு செலவின தொகையையும் வழங்க, அரசு திட்டமிட்டுள்ளது. 

இதற்காக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியரின் பெற்றோர்களின், வங்கி கணக்கு எண்களை பெற்று அனுப்புமாறு, சமூக நலம், சத்துணவு திட்ட துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

அதற்கான பணிகளில், வட்டார கல்வி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group