சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் கணக்கீட்டு முறை வெளியீடு - KALVISEITHI | கல்விச்செய்தி

Saturday, 27 June 2020

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் கணக்கீட்டு முறை வெளியீடு

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் கணக்கீட்டு முறை வெளியீடு


சென்னை: சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த தேர்வுகளை எழுத பதிவு செய்திருந்த மாணவர்களை தேர்ச்சி அடையச் செய்வதற்கான வழிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1ம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக மேற்கண்ட தேர்வுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டதாக சிபிஎஸ்இ தற்போது அறிவித்துள்ளது. இந்நிலையில், மேற்கண்ட தேர்வுகளை எழுத பதிவு செய்திருந்த மாணவர்களை எந்த அடிப்படையின் கீழ் தேர்ச்சிபெற்றதாக அறிவிப்பீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதன் பேரில் மாணவர்கள் தேர்ச்சியை நிர்ணயம் செய்வதற்காக சிபிஎஸ்இ தற்போது வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அது வருமாறு: 

* 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் என்பது, மாணவர்களுக்கு இதுவரை நடத்தி முடிக்கப்பட்ட பொதுத்தேர்வு பாடங்களின் அடிப்படையில் வழங்கப்படும்.
* 12ம் வகுப்பு மாணவர்களை பொறுத்தவரையில் கொரோனா தாக்கம் குறைந்த பிறகு தங்கள் மதிப்பெண்களை மாணவர்கள் உயர்த்திக் கொள்ளும் வகையில் சிறப்புதேர்வு ஒன்று நடத்தப்படும்.
* ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்துவதாக இருந்த தேர்வுகளுக்கு பதிலாக சிறப்பு தேர்வு நடக்கும். விருப்பமுள்ள மாணவர்கள் சிறப்பு தேர்வில் பங்கேற்கலாம்.
* 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்குரிய மதிப்பெண்களை கணக்கீடு செய்யும் போது, 3 தேர்வுகளுக்கு அதிகமான பாடங்களை எழுதிய மாணவர்களுக்கு எந்த பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ அதன் அடிப்படையில் பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிடப்படும்.

* பொதுத்தேர்வில் 3 பாடங்கள் மட்டும் எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண், அந்த மாணவர்கள் எழுதிய 3 தேர்வில் எந்த இரண்டு பாடங்களில் அதிக மதிப்பெண் உள்ளதோ அதன் அடிப்படையில் கணக்கிடப்
படும்.
* டெல்லியில் பொதுத்தேர்வு ஒன்று அல்லது இரண்டு பாடங்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டதால், அந்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அவர்கள் பெற்ற செய்முறை தேர்வு மதிப்பெண், அக மதிப்பீட்டு மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும்.
* 10ம் வகுப்பு மாணவர்களை பொறுத்தவரை சிறப்பு தேர்வு ஏதும் நடக்காது.

No comments:

Post a Comment

Join Our Telegram Group