Join Our KalviSeithi Telegram Group - Click Here
தரமான சம்பவம் காத்திருக்கு! சீன எல்லையை நோக்கி விரையும் இந்திய போர்விமானங்கள் - இனி அத்துமீறினால் ஆட்டம் காணும் சீனா!
இந்திய விமானப்படையின் போர் விமானங்களும், ராணுவ ஹெலிகாப்டர்களும் லடாக்கின் லே பகுதிகளில் வட்டமிடத் தொடங்கியுள்ளன.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர இடைவெளியில் இந்திய ராணுவமும், சீன ராணுவமும் எல்லைக்கோடு அருகே அணிவகுத்து நிற்கின்றன. சீனா 10 ஆயிரம் வீரர்களை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவும் சீனாவுக்கு நிகராகப் சரி சமமாக படைகளை நிறுத்தியுள்ளது.
திபெத் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் விமான தளங்கள் உள்ளது. அவற்றின் மூலமாக சீனா தனது விமானப் படையால் எல்லையில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது.
இதனை தொடர்ந்தே இந்தியா தனது விமானப் படையே சீனாவை நோக்கிய எல்லைப்பகுதிக்குத் திருப்பியுள்ளது. சுகோய், மிராஜ் , ஜாகுவர் போன்ற போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் எல்லையில் நிலையை ஆய்வு செய்ய விமானப்படைத் தலைமைத் தளபதி மார்ஷல் ஆர்.கே.எஸ் பகதூரியா லே பகுதிக்கு இரண்டு நாள் பயணமாக வந்தார்.
லே விமானப்படைத் தளத்தை பார்வையிட்டதை தொடர்ந்து, அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் விமானப் படையினர் தயார் நிலையில் இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.
Sunday, 21 June 2020
Home
Unlabelled
தரமான சம்பவம் காத்திருக்கு! சீன எல்லையை நோக்கி விரையும் இந்திய போர்விமானங்கள் - இனி அத்துமீறினால் ஆட்டம் காணும் சீனா!
தரமான சம்பவம் காத்திருக்கு! சீன எல்லையை நோக்கி விரையும் இந்திய போர்விமானங்கள் - இனி அத்துமீறினால் ஆட்டம் காணும் சீனா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment