கொரோனா வைரஸ் வலுவிழந்து வருகிறது...!’ -இத்தாலி மருத்துவர் சொல்வதென்ன?
சே. பாலாஜி
*விகடன்.....*
❓⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️
கொரோனா வைரஸ் பலமிழந்துவருவதற்கு, நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதற்கு ஏற்ற வகையில் செயல்படத் தொடங்கியிருப்பது முக்கியக் காரணம்.
சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ், இன்று உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. நாளுக்கு நாள் நோய்த்தொற்றின் பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில்... இந்தியா, அமெரிக்கா உட்பட உலக நாடுகள் பலவும் உயிர்க்கொல்லி நோயின் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முழு முனைப்புடன் போராடிவருகின்றன.
இதுவரை உலக சுகாதார நிறுவனத்தால் கோவிட்-19 வைரஸுக்கு எதிராக எந்தவித அதிகாரபூர்வமான தடுப்பு மருந்தும் அறிவிக்கப்படாத நிலையில், கோவிட்-19 வைரஸ் வலுவிழந்து வருவதாகவும், தடுப்பு மருந்தின் தேவையின்றி அது தானாகவே அழிந்துவிடும் என்றும், இத்தாலியைச் சேர்ந்த பிரபல தொற்றுநோய் மருத்துவர் மேட்டியோ பாஸெட்டி கூறியுள்ளார்.
இத்தாலியில் உள்ள சான் மார்டினோ மருத்துவமனையின் நோய்த்தடுப்புப் பிரிவில் பணியாற்றும் தொற்றுநோய் மருத்துவர் மேட்டியோ பாஸ்செட்டி இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்குத் தெரிவிக்கையில், "கொரோனா வைரஸின் வீரியம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டேவருகிறது. இதற்கு, மரபணுக்கள் மாற்றம் காரணமாக இருக்கலாம். மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசப் பிரச்னை அதிதீவிரமாக இருந்ததால், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அதற்கு அடுத்தடுத்த மாதங்களில் இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் கொரோனா நோயின் தாக்கம் புலியின் வேகத்தோடு இருந்தது. ஆனால், தற்போது அது காட்டுப்பூனையின் வேகத்துக்குக் குறைந்துள்ளது. தற்போது 80, 90 வயதுள்ளவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டால்கூட அவர்களுக்கு ஆக்ஸிஜன் சப்போர்ட், வென்டிலேட்டர்கள் தேவைப்படுவதில்லை. சாதாரணமாகவே சுவாசிக்கிறார்கள். ஆனால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இதே வயதுடையவர்கள் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டபோது, இரண்டு மூன்று நாள்களில் உயிரிழக்கும் நிலையே இருந்தது.
No comments:
Post a Comment