பிளஸ் 1 புதிய பாடப்பிரிவுகளால் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday 1 July 2020

பிளஸ் 1 புதிய பாடப்பிரிவுகளால் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

பிளஸ் 1 புதிய பாடப்பிரிவுகளால் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு


பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில் சேரும் போது, தங்களுக்கென குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை தேர்வு செய்வர். கருத்துஇன்ஜினியரிங் மட்டும் படிக்க விரும்புவோர், உயிரியல் இல்லாத பாடப்பிரிவையும், மருத்துவம் படிக்க விரும்புவோர், கணிதம் இல்லாத உயிரியல் இணைந்த, அறிவியல் பாடப்பிரிவையும் தேர்வு செய்வர்.அதேபோல, வரலாறு, பொருளியல், வணிகவியல், தொழிற்கல்வியியல்உள்ளிட்ட பிரிவுகளையும், மாணவர்கள் தேர்வு செய்வர். இதனால், தமிழ் அல்லது மொழி பாடத்துடன் ஆங்கிலமும், நான்கு முக்கிய பாடங்களும் இடம்பெறும்.இந்த பாடப்பிரிவுகளை கூடுதலாக்க வேண்டும் என, கல்வியாளர்கள்கருத்து தெரிவித்து இருந்தனர். குறிப்பாக, இன்ஜினியரிங் படிக்க விரும்புவோருக்கு, அதற்கான மூன்றுபாடங்கள் மட்டும் இணைந்த பிரிவும், மருத்துவம் என்றால்,அதற்கான மூன்று பாடங்கள் மட்டும் இணைந்த, பாடப்பிரிவும் தேவையாக இருந்தது.இதையொட்டி, புதிய பாடப்பிரிவுகளை, தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது. இதில், ஒவ்வொரு உயர் கல்விக்கும் தேவையான, மூன்று முக்கிய பாடங்கள் மட்டும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பாடப்பிரிவு, இந்த கல்வி ஆண்டில் அமலாகிறது.

அறிமுகம்

இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:

மொழிப்பாடம், ஆங்கிலம் ஆகியவற்றுடன், மூன்று முக்கிய பாடங்கள் மட்டும் உள்ள, புதிய பிரிவுகள், இந்த கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஏற்கனவே உள்ள, நான்கு முக்கிய பாடங்கள் இணைந்த பாடப்பிரிவும் அமலில் உள்ளன. எனவே, உயர் கல்வி படிப்பில் கூடுதல் வாய்ப்புகள் தேவை என்றும், கூடுதலாக கல்வி கற்க தயார் என்றும் கூறும் மாணவர்கள், நான்கு முக்கிய பாடங்கள் இணைந்த, பழைய பாடப்பிரிவை தேர்வு செய்யலாம்.ஆனால், கூடுதல் பாடங்கள் தேவையில்லை. தங்களது உயர் கல்விக்கு தேவையான மூன்று பாடங்கள் மட்டும் இருந்தால் போதும் என, விரும்பும் மாணவர்கள், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாடப்பிரிவில் சேரலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group