Join Our KalviSeithi Telegram Group - Click Here
பலவிதமான பணப் பிரச்சினைகளையும், தீர்த்து வைக்கக் கூடிய சக்தி இந்த 2 பொருளுக்கு உண்டு.
பலவிதமான பணப் பிரச்சினைகளையும், தீர்த்து வைக்கக் கூடிய சக்தி இந்த 2 பொருளுக்கு உண்டு. இப்படி செஞ்சா, உங்க கைக்கு பணவரவு இருந்து கொண்டே இருக்கும்.
நமக்கு பல பிரச்சனைகள் இருந்து வந்தாலும், அதில் முதல் பிரச்சனையாக இருப்பது பண பிரச்சனை தான். பணவரவிற்கு பல பரிகாரங்கள் இருக்கிறது. இருப்பினும், எந்த பரிகாரமானது உங்களுக்கு சரியாக வரும் என்பதை தேர்ந்தெடுத்து, அதை மனநிறைவோடு, நம்பிக்கையோடு செய்ய வேண்டியது மிக மிக அவசியம். அந்த வரிசையில் உங்களுக்கு வாராக் கடனை கூட வசூலித்து தரும், உங்கள் கையில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும், ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இதை செய்ய சிறிய அளவிலான படிகாரம், வசம்பு துண்டு 1, சதுர வடிவில் இருக்கும் பச்சை துணி, இந்த மூன்று பொருட்கள் தான் தேவை. பச்சை வண்ண துணியில், படிகாரத்தையும், வசம்பயும் வைத்து ஒரு நூல் போட்டு கட்டிவிட்டு, உங்கள் நில வாசப்படியில் மாட்டி வையுங்கள். நில வாசற்படிக்கு வெளி பக்கமாக மாட்ட வேண்டும். எல்லோரது கண்களிலும் இது தெரியும் படி இருக்க வேண்டும்.
இந்த இரண்டு பொருட்களையும், தனித்தனியாக வைக்கும் போது கிடைக்கக் கூடிய பலனை விட, இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைக்கும் போது கிடைக்கும் பலன் அதிகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி செய்யும்பட்சத்தில் உங்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகை விரைவாக வசூலாகும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதோடு மட்டுமன்றி உங்கள் வீட்டிற்குள் பணவரவு தங்கு தடையின்றி வந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது பணவரவு இருந்து கொண்டே இருக்க வேண்டும். செலவு இருக்கக் கூடாது என்று நினைப்பது தவறு. பண வரவிற்கு ஏற்றவாறு செலவு செய்தால்தான், பணம் வருவதும் போவதுமாக இருக்கும். உங்கள் கையில் வரக்கூடிய பணத்தை செலவு செய்யாமல் அப்படியே வைத்திருந்தால் அது பெருகாது என்பதும் நிதர்சனமான உண்மை. தேவைக்கேற்றவாறு செலவு செய்வதற்காகத்தான் பணம் என்பதை மறந்து விடாதீர்கள்.
இந்த பரிகாரத்தை எந்த கிழமையில் வேண்டும் என்றாலும் செய்யலாம். ஆனால், பரிகாரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டும். உங்கள் வீட்டு பூஜை அறையில், ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்களது குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு, பணம் பரிமாற்றம் உங்கள் வீட்டில் தங்குதடையின்றி நடைபெற வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து இந்த முடிச்சை, பூஜை அறையில் முடிந்து விட்டு, கொண்டுவந்து நில வாசப்படியில் கட்டிவிடுங்கள். நூலை வைத்து முடிச்சை கட்டும் போது, மூன்று முடிச்சுப் போட வேண்டும். கருப்பு நிற நூலை தவிர, வேறு எந்த நிற நூலை வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம்.
இந்த துணியில் இருக்கும் படிகாரத்தின் மூலமாக உங்கள் வீட்டில் இருக்கும் பணத்தில் தேவையில்லாத தோஷமும் அல்லது யாருடைய கண்திருஷ்டி இருந்தால் கூட, அது வாசலிலேயே நின்று விடும். அதில் வைத்திருக்கும் வசம்பு வசீகரத் தன்மை உடையது. உங்களிடம் பணம் பெற்றுச் சென்றவர்கள், உங்களை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தவர்கள் கூட, மனம் மாறி தானாகவே, அவர்களாகவே ‘உங்களை ஏமாற்ற கூடாது’ என்ற எண்ணம் கொண்டு அந்த பணத்தை வட்டியோடு திருப்பித் தந்து விடுவார்கள்.
நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து தான் பாருங்களேன். உங்களுக்கு வராது என்று நினைத்துக் கொண்டிருந்த பணம் வந்தால் லாபம்தான். வராத பட்சத்தில் ஒரு வசம்பு, ஒரு படிகாரத்தின் மூலம் எந்த ஒரு நஷ்டமும் ஏற்படப்போவதில்லை என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.
Wednesday, 1 July 2020
Home
Unlabelled
பலவிதமான பணப் பிரச்சினைகளையும், தீர்த்து வைக்கக் கூடிய சக்தி இந்த 2 பொருளுக்கு உண்டு.
பலவிதமான பணப் பிரச்சினைகளையும், தீர்த்து வைக்கக் கூடிய சக்தி இந்த 2 பொருளுக்கு உண்டு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment