பல்கலை இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்தாகிறதா?: இன்று அறிவிப்பு வெளியாகிறது - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday 1 July 2020

பல்கலை இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்தாகிறதா?: இன்று அறிவிப்பு வெளியாகிறது

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here
பல்கலை இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்தாகிறதா?: இன்று அறிவிப்பு வெளியாகிறது

நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை அறிவிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு தற்போது ஜூலை மாதம் 31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், பல்கலைக் கழக மானியக் குழு, தேர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை விரைவில் அறிவிக்கப்போவதாக தெரிவித்து இருந்தது. 

அதன் அடிப்படையில் உத்தபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளன.

இதற்காக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள வல்லுநர்கள் குழுக்கள் அல்லாமல்  மேலும் ஒரு வல்லுநர் குழுவை அமைத்துள்ளனர். 

இந்த குழு கடந்த வாரம் கூடி, தற்போதுள்ள கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதனால் ஏற்படுள்ள கல்விப் பணி பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்தது. மற்ற மாநிலங்களில் நிலவும் சூழல்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம், இந்திய பார் கவுன்சில், கட்டிட வடிவமைப்பு கவுன்சில், மருந்து தயாரிப்போர் கவுன்சில், மற்றும் உள்ள பல்வேறு அமைப்புகளிடம் ஆலோசனை கேட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் பார்த்தால் இறுதி ஆண்டுத் தேர்வு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே, உத்தரபிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் நேற்று முன்தினம் பேசும் போது, தேர்வு நடத்துவது குறித்த முடிவுகள் ஜூலை 2ம் தேதி எடுக்கப்படும் என்றார். 

இதன்படி இறுதிஆண்டு தேர்வுகள் மற்றும் செமஸ்டர் தேர்வுகள் ஜூலை மாதம் நடத்தப்படும். இல்லை என்றால் ஒத்தி வைக்கப்படும். 

அதுவும் இல்லையென்றால், மாணவர்கள் பெற்றுள்ள அகமதிப்பீட்டின்படி அவர்கள் தேர்ச்சிபெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
(மின்னல் கல்விச்செய்தி) இந்த முடிவுகள் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்களின்படிதான் இருக்கும் என்றும் தெரிகிறது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்கலை மற்றும் கல்லூரிகளை சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் சமூக ஊடங்கள் வாயிலாக, தேர்வுகளை ரத்து செய்யுங்கள் அல்லது ஒத்தி வையுங்கள் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 இதன்பேரில் பல மாநிலங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது

No comments:

Post a Comment

Join Our Telegram Group