கொரோனா வைரஸை தொடர்ந்து சீனாவில் உருவான புதிய வைரஸ்.. அலறும் சீனா.!! - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday, 1 July 2020

கொரோனா வைரஸை தொடர்ந்து சீனாவில் உருவான புதிய வைரஸ்.. அலறும் சீனா.!!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here  கொரோனா வைரஸை தொடர்ந்து சீனாவில் உருவான புதிய வைரஸ்.. அலறும் சீனா.!!

உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றனர். இதற்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

உலக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு 200க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகளை தயாரித்துள்ளனர். அவை பல்வேறு சோதனை நிலையங்களில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை உலக முழுவதும் கொரோனா வைரசால் 10,402,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 507,523 பேர் இறந்துள்ளனர்.

இந்த உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதலில் சீனாவின் வுகாண் மாகாணத்தில் தான் பரவத்தொடங்கியது. தற்போது இந்த வைரஸ் பல்லாயிரக்கணக்கானோரை பாதித்துள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் சீனாவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இந்நிலையில், அங்கு புதிய நோய் தோற்று ஏற்பட்டுள்ளது. புதிதாக காய்ச்சலை பரப்பும் வைரஸ் குறித்து சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சீன விஞ்ஞானிகள் கூறுகையில், இந்த வைரஸ் ஆனது பன்றிகள் மூலம் பரவக்கூடிய ஒரு வைரஸ் ஆகும். பன்றிகள் மத்தியில் வேலை செய்பவர்கள், இந்த வைரஸ் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை எளிதில் தாக்கக் கூடியது என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group