பெரியார் அண்ணா நினைவகம் பார்த்து விட்டு ஈரோடு பேருந்து நிலையம் செல்லும் வழியில் ஒரு அதிசய மனிதரை கண்டேன்.ஆட்டோ ஓட்டுனராகிய அவரது பெயர் சிவாஜி.பெரியார் நினைவகத்தை பார்த்துவிட்டு வரும்போது பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என்று கேட்டோம் . அவரும் எங்களிடம் ரூபாய் 60 மட்டுமே கேட்டார்.நாங்கள் முதலில் பேருந்து நிலையத்தில் இருந்து பெரியார் நினைவகம் வரும்போது எங்களிடம் ஆட்டோ ஓட்டுநர் ரூபாய் 100 கேட்டார்.ஆனால் நாங்கள் பின்னர் விசாரித்தபோதுதான் எங்களுக்கு தெரிந்தது, பேருந்து நிலையம் முதல் பெரியார் நினைவகம் வரை வர ரூபாய் 60 மட்டுமே என்று.அந்த தொகையை சரியாக கேட்டார்.நாங்களும் உடனடியாக சரி என்று சொல்லி அவரது ஆட்டோவில் பேருந்து நிலையம் சென்றோம்.அப்போது அவரிடம்,செல்லும் வழியில் பேருந்து நிலையம் அருகில் நல்ல காபி கடை இருந்தால் இறக்கி விடுங்கள் என்று சொன்னோம்.அவரோ,செல்லும் வழியில் ஈரோடு பில்டர் காபி கடையில் இறக்கி விட்டு ,அந்த கடையில் காபி நன்றாக இருக்கும் என்றும்,சாப்பிட்டு விட்டு வாருங்கள் ,நான் காத்து இருக்கிறேன் என்றும் அன்புடன் சொன்னார்.பிறகு நாங்கள் காபி சாப்பிட அவரையும் அழைத்தோம்.அதற்கு அவரோ,சார் நான் காபி சாப்பிடுகிறேன் ,ஆனால் எனது செலவில் தான் காபி சாப்பிடுவேன்.நான் அடுத்தவர்கள் காசில் டீ ,காபி சாப்பிடுவதில்லை என்று சொன்னார் பாருங்கள்.அருமையான வார்த்தை.எனக்கு அவரை மிகவும் பிடித்து இருந்தது.பிறகு அன்புடன் நாங்கள் காபி குடித்து முடிக்கும் வரை எங்களுடன் இருந்து விட்டு,நிதானமாக எங்களை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டார்.நானும் அவரிடம் 70 ரூபாய் கொடுத்தேன்.பெற்று கொண்டு மீதி 10 ரூபாயை கொடுத்தார்.நாட்டில் இப்படி நல்லவர்களும் இருக்கிறார்களே என்று எண்ணி கொண்டு அவரிடம் விடை பெற்று கரூர் செல்லும் பேருந்தை நோக்கி சென்றோம்.வாழ்த்துக்கள் தோழர் சிவாஜி அவர்களுக்கு.அவரது மொபைல் எண் :9345108574.
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
No comments:
Post a Comment