*📍📍மேனாள் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துதல்*
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.
ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.முத்தமிழ் வேத திருச்சபையின் இணை செயலர் ஆதிரெத்தினம் முன்னிலை வகித்தார்.அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் சுப்பையா பள்ளி ஆசிரியர்கள் செயல்பாடுகளை பாராட்டி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கதுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.குறிக்கோள் பற்றி இளம் வயதில் சொல்லி அசத்தும் வகையில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதுடன் , பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து வெற்றியுடன் தோல்வியையும் கற்று கொடுக்கும் பள்ளியின் செயல்பாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.
மேலும் விரிவாக :
வெற்றியுடன் தோல்வியையும் கற்று கொடுக்கும் பள்ளி
குறிக்கோள் பற்றி இளம் வயதில் சொல்லி அசத்தும் மாணவர்கள்
வாய்ப்புகளை ஏற்படுத்தி கல்வியை கொடுக்கும் பள்ளி
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற மேனாள் அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் சொ .சுப்பையா பள்ளியை பாராட்டி பேசியதாவது:
குறிக்கோள் பற்றி இளம் வயதில் சொல்லி அசத்தும் மாணவர்கள் :
இந்த பள்ளி மாணவர்களிடம் குறிக்கோள் பற்றி கேட்டால் உடனே பதில் கூறிவிட்டார்கள்.ஒவ்வொருவரின் குறிக்கோள் தெரிந்து விட்டாலே வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம்.இந்த பள்ளி மாணவர்கள் குறிக்கோளுடன் இருப்பதால் கண்டிப்பாக வரும்காலத்தில் வெற்றியாளர்களாக வருவார்கள்.
வெற்றியுடன் தோல்வியையும் கற்று கொடுக்கும் பள்ளி :
100 போட்டிகளில் பங்குபெற்ற மாணவி 50 போட்டிகளில் தோல்வியுடையும்போது ஆசிரியர்கள் கூறும் நம்பிக்கை வார்த்தைகள் மிக முக்கியம்.சில மதிப்பெண் குறைந்தாலே மோசமான முடிவுகளை எடுக்கும் காலத்தில் தோல்வியையும் வெற்றிகரமாக சமாளிக்க இப்பள்ளி கற்றுக்கொடுத்து வருவது பாராட்டுக்குறியது .
எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்திய பரிசு :
எங்கள் பள்ளியில் நான் 10ம் வகுப்பு படிக்கும்போது ஆண்டு விழாவின்போது ஒரு திருக்குறள் கூறி விளக்கம் சொன்னேன்.நன்றாக சொன்னதாக குறி ஒரு பேனா பரிசு கொடுத்தனர்.அது என்னுடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.தன்னம்பிக்கையை வளர்த்தது.என்னை மென்மேலும் வெற்றி பெறச்செய்தது.
பெரிய அளவில் ஆராய்ச்சி செய்த திறமையாளர்கள் கூட எளிதாக சொல்ல முடியாத திருப்பாவை,திருவம்பாவைபாடல்களை இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர் மைக் பிடித்து கூறுகிறார்கள் என்றால் ,அவர்கள் பிற்காலத்தில் மிகப்பெரிய ஆளாக வருவார்கள்.
இப்பள்ளி மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள் :
இந்த பள்ளிக்கு பல்வேறு தலைவர்கள் வந்துள்ளனர்.இஸ்ரோ விஞ்ஞானி,பல்கலைக்கழக துணை வேந்தர்கள், ஆட்சி பணியில் உள்ள அதிகாரிகள் என அனைத்து தலைவர்களும் தங்களுடைய கருத்துக்களை மாணவர்களுக்கு வழங்கி உள்ளனர்.இந்த பள்ளி மாணவர்கள் அவர்களிடம் பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளனர் .நாங்கள் படிக்கும்போது இதெல்லாம் எங்களுக்கு கற்றுக்கொடுக்கவில்லை.குறிக்கோள் பற்றி கட்டுரை எழுதும்போது ஒரு வார்த்தை எழுத செல்லும்போதுதான் அந்த வார்த்தையை கேட்டு உள்ளேன்.அனால் இந்த பள்ளி மாணவர்கள்,தாங்கள் என்னவாக வரவேண்டுமோ ,அவர்களை நேரில் பார்த்து,பேசி தங்கள் குறிக்கோளை நிர்ணயித்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.பாராட்டுக்கள்.
வாய்ப்புகளை ஏற்படுத்தி கல்வியை கொடுக்கும் பள்ளி
அனுபவம் வாய்ந்த கல்வியே சிறந்த கல்வி ஆகும்.நீங்கள் வங்கி ,பல்கலைக்கழகம்,வேளாண்மை கல்லூரி,கோர்ட்,பாஸ்போர்ட் அலுவலகம்,கல்லூரி,தபால் அலுவலகம்,வேளாண்மை பண்ணை போன்று பல்வேறு இடங்களுக்கு சென்று அனுபவ அறிவு பெற்று உள்ளீர்கள்.நேரடி அனுபவம் மூலமே சிறந்த கல்வியை பெற இயலும்.நான் படிக்கும் காலத்தில் வங்கி என்பதை புத்தகத்தில் மட்டுமே படித்து உள்ளேன்.ஆனால் வங்கிக்கு சென்றேன்,அங்கு எனக்கு கணக்கு உள்ளது என்று இளம் வயது மாணவர்கள் கூறியது என்னை வியப்பில் ஆழ்த்தியது. உங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதற்கான ஏற்பாடுகளை நல்ல முறையில் செய்து வருகிறார்கள்.அதன் மூலம் அனுபவம் வாய்ந்த கல்வியை உங்களுக்கு அளிக்கிறார்கள்.பெரிய பள்ளிகள் என்று நாம் நினைக்கும் பள்ளிகளில் கூட இந்த வாய்ப்பு கொடுக்கப்படவில்லை..அந்த வகையில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உண்மையில் பெரிய அதிர்ஷ்டம் செய்தவர்கள் .என்று பேசினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் சுப்பையா பள்ளி ஆசிரியர்கள் செயல்பாடுகளை பாராட்டி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கதுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
No comments:
Post a Comment