கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி அரசு பேருந்து ஒன்று இன்று காலை 4.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது . இந்தப் பேருந்து சூளகிரி அருகே சூளகிரி பக்கமாக வந்த போது திடீரென்று பஸ்ஸின் முன்புற ரெண்டு டயர்கள் கழன்று விபத்துக்குள்ளானது . இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கீழே இறங்கி சாலையைக் கடக்க முயன்றனர் . அந்த நேரம் பின்னால் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி புதிய அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது . சாலையை பயணிகள் கிடப்பதைப் பார்த்த அந்தப் பேருந்தின் டிரைவர் பஸ்சை சடன் பிரேக் போட்டு உடனடியாக நிறுத்தினார் . அந்த நேரம் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று புதிய அரசு பேருந்தின் மீது பயங்கரமாக பின்புறமாக மோதியது . மேலும் முன்னாள் பழுதாகி நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீதும் மோதி கவிழ்ந்தது . இதில் புதிய அரசு பேருந்தும் லாரியும் சாலையில் ஆங்காங்கே விழுந்து கிடந்தன .இந்த கோர விபத்தில் சாலையைக் கடக்க முயன்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் . 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் . இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் . அதேபோல் ஆம்புலன்ஸ் வாகனங்களும் அங்கு கொண்டுவரப்பட்டன .பலியான மூன்று பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் .அவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் . காயமடைந்த 15 பேரையும் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர் . இந்த விபத்தால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது .விபத்துக்குள்ளான மூன்று வாகனங்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் . இதற்காக ராட்சத கிரேன்கள் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் . இந்த விபத்து தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
Join Our KalviSeithi Telegram Group - Click Here
No comments:
Post a Comment