தமிழகத்தில் இரு ஆசிரியர் உள்ள 2 ஆயிரத்து 142 பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை குறைந்த மாணவர்களே இருப்பதால் முதல்-அமைச்சர் தலைமையில் கல்வியாளர்கள் அமைச்சர்கள் கூட்டம் நடத்தப்பட்டு கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் 412 மையங்களில் 5 ஆயிரம் பேருக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. கேரளா போன்ற மாநிலங்களில் நீட் தேர்வு பயிற்சிக்கு ரூ.2 லட்சம் வரை மாணவர்கள் செலவிட வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் மாணவர்கள் மத்திய அரசு தேர்வுகளை எளிதாக சந்திக்கும் வகையில் படிப்படியாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திடங்களை மாற்ற 2 ஆண்டுகாலம் அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் 8 மாதங்களில் பாடத்திட்டத்தை மாற்றியமைத்து சாதனை படைத்துள்ளோம்.
புதிய பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அனைத்து போட்டித்தேர்வுகளையும் எளிதாக எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும். இந்தியாவிலேயே முதன்முறையாக கல்வி தொலைக்காட்சியை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை தொடங்க உள்ளது. வரும் கல்வி ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. நீட் தேர்வில் இந்த ஆண்டு மாணவ-மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment