∆∆∆ இருளில் ஒளிரும் உலோகம் ∆∆∆
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?
என்று கூறி முட்டாள் தனமான செயலை அந்தக் காலத்தில் ஆணாதிக்க வெறியர்கள் செய்தார்கள்....
ஆண்களைவிட பெண்கள் மிகத் திறமையானவர்கள்
யோசிப்பதிலும்,திட்டமிடுவதிலும்,அதை செயல்படுத்துவதிலும் பெண்கள் கெட்டிக்காரர்கள்
அப்படிப்பட்ட ஒரு பெண்மணியின் கண்டுபிடிப்பை பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம்
அதற்கு முன் ஒரு flashback......
ஹென்றி பெக்வரல் என்ற பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி இருந்தார்.
சில பொருட்களை வெயிலில் வைத்துவிட்டு பின் இருளில் வைத்தால் அவை ஒளிரும்.
யுரேனியமும் அந்த விதமான உலோகம் என பெக்வரல் கருதினார்.
அந்த காலத்தில் புகைப்படம் எடுக்க இப்போது போல டிஜிட்டல் கேமராக்கள் இல்லை
அதற்கு முன் புகைப்படம் எடுக்க சுருள் (பிலிம் ரோல்) தான் பயன்பட்டது.
இந்த சுருள் வருவதற்கு முன் புகைப்பட தட்டிகள் தான் புழக்கத்தில் இருந்தன.
இந்த புகைப்பட தட்டிகள் மீது ஒளி பட்டால் அவை எக்ஸ்போஸ் ஆகிவிடும்.அதற்கு பின் அந்த தட்டி படம் எடுக்க பயன்படாது.
எனவே தட்டிகளை பாதுகாக்க அதன் மீது ஒளி புகாத கருப்புத்தாளை சுற்றி
வைப்பார்கள்.
பெக்வரல் இப்படித்தான் தட்டியின் மீது கருப்பு தாளை சுற்றி கட்டி, அதன் மீது யுரேனியம் அடங்கிய பொருளையும் வெள்ளிக்காசையும் சேர்த்து மொத்தத்தையும் வெயிலில் வைப்பார்.பின் புகைப்படத் தட்டிகளை டெவலப் செய்வார்.
யுரேனியம் காரணமாக புகைப்பட தட்டி எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை கண்டறியவே இந்த ஏற்பாடு.அவர் நினைத்தது போலவே வெள்ளிக்காசின் நிழல் புகைப்பட தட்டியில் விழுந்தது.
இதிலிருந்து அவர் கண்டது என்னவெனில் யுரேனிய கதிர்வீச்சை வெள்ளிக்காசு தடுக்கிறது.அதனால் தான் காசின் நிழல் ஒளிபட தட்டியின் மீது தெரிகிறது
பிறகு ஒரு நாள் மழைக்காலம் வெயில் இல்லை.அதேபோல சுருளை கட்டி இருட்டு அறையில் வைக்கிறார்.திரும்ப வந்து பார்க்கிறார். வெள்ளிக்காசின் நிழல் அதே அளவுக்கு தட்டியில் விழுந்திருப்பதை கவனிக்கிறார்....
இதிலிருந்து அவர் கண்டது யுரேனியம் இருளிலும் கதிர்வீச்சை வெளியிடுகிறது என்பதே.......
யுரேனியத்திலிருந்து இயற்கையாகவே கதிர்கள் வெளிப்படும் என்பதை பெக்வரல் எதிர்பார்க்கவில்லை.
அந்த கதிர்கள் பற்றி எந்த விவரமும் தெரியாத நிலையில் அக்கதிர்களுக்கு யுரானிக் கதிர்கள் என பெயர் வைக்கிறார்.
இப்போது தான் ஒரு புத்திசாலி பெண்மணி வருகிறார்.அந்த இளம்பெண்ணுக்கு அந்த யுரானிக் கதிர்கள் மீது ஒரு ஈர்ப்பு வருகிறது. போலந்து நாட்டை சேர்ந்தவரான அவர்,மேற்படிப்பிற்காக பிரான்ஸ் வந்தார்.
இயற்பியலுக்காக இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஒரே பெண்மணி அவர்தான் தி கிரேட் மேடம் கியூரி
யுரேனியம் தவிர வேறு உலோகத்திலிருந்து யுரானிக் கதிர்கள் தோன்றுமா என்ற ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டார். தோரியம் என்ற உலோகத்திலிருந்தும் அது போன்ற கதிர்கள் வெளிப்படுவதை அவர் கண்டுபிடித்தார்....
அச்செயலுக்கு அவர் கதிரியக்கம் என்று பெயரிட்டார்.அதாவது Radioactivity
பிறகு அவர் யுரேனியம் எடுக்கப்பட்ட பிறகு, கழிவு பொருளாக மிஞ்சும் பிட்ச்பிளெண்ட் என்னும் கருப்பான தாதுப்பொருளை டன் கணக்கில் வரவழைத்தார்..
பாரிஸ் நகருக்கு வெளியே ஒதுக்குப்புறத்தில் ஒரு கொட்டகையை போட்டு ஆராய்ச்சியை தொடங்கினார்.
உதவுவதற்கு ஊழியர்கள் இல்லை
சரியான ஆராய்ச்சி கருவிகள் இல்லை
போதிய நிதி வசதியும் இல்லை
மேரி கியூரி தன் புத்திசாலி தனம்,தன்நம்பிக்கையையே நம்பி ஆராய்ச்சியில் இறங்கினார்.
பெரும்பாடுபட்டு அந்த யுரேனிய கழிவுப் பொருளிலிருந்து ஒரு பொருளை பிரித்தெடுத்தார்...
அது யுரேனியத்தை விட 400 மடங்கு கதிரியக்கத் தன்மை கொண்டதாக இருந்தது.
அந்த பொருள் இதுவரை அறியப்படாத பொருளாக இருந்தது. மேரி கியூரியின் தாய்நாடான போலந்து நாட்டை குறிக்கும் வகையில் அதற்கு பொலோனியம் என்று பெயரிட்டார்.அதுவும் ஓர் உலோகமே.
பிறகு மேரி கியூரி தொடர்ந்து ஆராய்ச்சி செய்தார்.மேலும் ஒரு கதிரியக்க பொருளை 1902 ல் கண்டுபிடித்தார்.
அது யுரேனியத்தை விட 10 லட்சம் மடங்கு கதிரியக்கத்தை வெளிப்படுத்தியது
அதற்கு ரேடியம் என பெயர் வைத்தார்.இந்த ரேடியம் புதுமையாக இருந்தது. அதற்கும் மேலாக ரேடியம் அடங்கிய குப்பியை இருட்டில் வைத்தால் அது வெளிறிய நீல நிற ஒளியை வெளியிட்டது
விஞ்ஞானிகள் அதை ஒரு அதிசய பொருளாக பார்த்தார்கள்.
இதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இதில் ஒரு சோகம் என்ன என்றால் மேரி கியூரி,அவர் மகள் ஐரின் கியூரி இருவருமே கதிரியக்கத்தின் தாக்குதலின் விளைவாக ஏற்பட்ட பாதகமான விளைவுகளால் உயிரிழந்தனர்.
வாழ்க! பெண்மை!
நன்றி! வணக்கம்!
No comments:
Post a Comment