ஆண்டைகளுக்கு அடிமையாக்கி அனுப்ப ஐந்தாம் வகுப்பில் அரசுத் தேர்வா? - KALVISEITHI | கல்விச்செய்தி

Monday, 2 December 2019

ஆண்டைகளுக்கு அடிமையாக்கி அனுப்ப ஐந்தாம் வகுப்பில் அரசுத் தேர்வா?

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

ஆண்டைகளுக்கு அடிமையாக்கி அனுப்ப ஐந்தாம் வகுப்பில் அரசுத் தேர்வா?

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

🥵10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வோடு கூடுதலாக 3, 5, 8 வகுப்புகளில் அனைத்து மாணவர்களுக்கும் தேசிய அளவில் பொதுத்தேர்வுகள்நடத்தப்பட்டு கல்வி - திறன்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். அடுத்த வகுப்புக்கு செல்ல இத்தேர்வுகள் அவசியம்.

🥵குறிப்பாக, 3-ம் வகுப்பில் நடத்தப்படும் தேர்வு அடிப்படைக் கல்வி அறிவுக் கணக்கீட்டுத் திறன் மற்றும் ஏனைய கல்வித் திறன்கள் பரிசோதிக்க உதவும் (பக்கம் 107(பி4.9.4) என்கிறது மற்றொரு பரிந்துரை.

🥵தேசிய அளவில் 8 வயது முதல் 18 வயது வரையில் ஒட்டு மொத்த பள்ளி சேர்ப்பு விகிதம் ஆரம்ப வகுப்பில் 151 விழுக்காடு ஆக இருப்பது 2017 கணக்கீட்டின்படி 9, 10 வகுப்புகளில் 79.3 விழுக்காடு ஆக குறைந்து 11, 12 வகுப்புகளில் வெறும் 51 விழுக்காடு விடுகிறது.

🥵கல்விக் குழு அறிக்கையின்படி இன்றும் (பக்கம் 65) 1.5 கோடிக் குழந்தைகள் பள்ளி செல்ல எது இல்லை. மேற்கண்ட (மிரட்டல்) தேர்வுகள் மேலும் குழந்தைகளை வடிகட்டினால், வசதியும் வாய்ப்பும் உள்ளவர்களை மட்டுமே உயர் நிலைக் கல்வி நோக்கிச் செல்லவைக்கும் அபாயம் உள்ளது.

🥵இது 'கல்வி உரிமை சட்டத்திற்கு எதிரானது இல்லையா?' எனும் தமிழ்நாடு உளவியல் நிபுணர்கள் சங்கத்தின் அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப்படுகிறது. அரசு இதைக்கவனித்து இந்தத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.

உலக நாடுகளில் பள்ளி பருவத் தேர்வுகளை பற்றி அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளுங்கள் தோழர்களே!

https://localschoolsnetwork.org.uk/faq/what-are-examination-systems-other-countries

ஆனால் நம் நாட்டில்❓

எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகணும்,

பத்தாண்டுக் கல்வியினை நிச்சயம் படிச்சு ஆகணும்

ஓட்டல் மேசை துடைக்கும் சின்ன அரும்பைப் பாரு!

_நீ
கொஞ்சுகிற பிஞ்சு முகம் போலில்லையா கூறு_

முல்லை அரும்பாகி

முழுப்பூவாய் மாறும் முன்னே

தொல்லை தூரத்துதம்மா

வளர்பிறையே தேயுதம்மா

-பேரா.ரவிச்சந்திரன் எழுதிய அறிவொளிப்பாடல்

🙏நன்றி🙏
தீக்கதிர் நாளிதழ்.

✍கட்டுரையாளர்;

"முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே" உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்,
அரசுப் பள்ளி தமிழாசிரியர் (ஓய்வு)

தொடர்பிற்கு :
muthunilavanpdk@gmail.com

No comments:

Post a Comment

Join Our Telegram Group