திருமணமான தம்பதிகளுக்கான அசத்தல் ஓய்வூதியத் திட்டங்கள்!  - KALVISEITHI | கல்விச்செய்தி

Thursday, 5 December 2019

திருமணமான தம்பதிகளுக்கான அசத்தல் ஓய்வூதியத் திட்டங்கள்! 

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here



ஆண்டுக்கு ரூ.36,000 ஓய்வூதியம் (மாதத்திற்கு ரூ.3,000) உறுதியாகக் கிடைக்கும் வகையில் திருமணமான தம்பதிகளுக்கு இரு பென்சன் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு. Pradhan Mantri Shram Yogi Maandhan (PM-SYM) மற்றும் National Pension Scheme for Traders and Self-Employed Persons (NPS-Traders) ஆகியவைதான் அந்த இரு திட்டங்கள் ஆகும். 

 30ஆவது வயதிலிருந்து அவர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.100 என்ற கணக்கில் முதலீடு செய்வதன் மூலம், 60 வயதிலிருந்து மேற்கண்ட ஓய்வூதியத் தொகையை அவர்கள் பெற முடியும். 

 தம்பதியரில் ஒருவர் மரணமடைந்தால், மற்றவர் 50% ஓய்வூதியத் தொகையைப் (மாதத்திற்கு ரூ.1,500) பெறுவார். இத்திட்டங்களின் மூலம், வயதைப் பொறுத்து மாதத்திற்கு ரூ.55 முதல் ரூ.200 வரை முதலீடு செய்ய முடியும். அதற்குச் சமமான முதலீட்டுத் தொகையை மத்திய அரசும் கொடுக்கும். மேலும், இத்திட்டங்களில் சேருவது மிகவும் எளிது. ஆதார் மற்றும் சேமிப்பு வங்கி அல்லது ஜன்தன் கணக்கு இருந்தால் போதும், ஓரிரு நிமிடங்களிலேயே இத்த்திட்டத்தில் ஒருவர் சேர முடியும். 

 மாதத்திற்கு ரூ.15,000க்கும் குறைவான வருமானம் பெறும் 18 முதல் 40 வயதுள்ளவர்கள் இத்திட்டங்களில் சேர முடியும். அவர்கள் EPFO, ESIC அல்லது NPS ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கவும் கூடாது. தம்பதியர் இருவரும் தனித்தனி கணக்கு வைத்திருந்தால், இருவரும் தனித்தனியாகவே இத்திட்டத்தில் சேர்ந்து இரு மடங்கு ஓய்வூதியம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Join Our Telegram Group