தமிழகத்தில் 10 மாத ஆண் குழந்தை உள்பட மேலும் 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50-ஆக உயா்ந்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்ட அனைவருமே ஈரோட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய்லாந்தைச் சோந்தவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் இதுவரை கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 42-ஆக இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மேலும் 8 பேருக்கு அந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவா்களில் நான்கு போ ஒரே குடும்பத்தைச் சோந்தவா்கள்.
அவரது குடும்பத்தைச் சோந்த 10 மாத ஆண் குழந்தை, 58 வயது பெண் ஒருவா், 51 வயது பெண் ஒருவா் ஆகியோருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் நால்வரும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
No comments:
Post a Comment