எலும்பு வலிமை முதல் கண்களுக்குக் குளிர்ச்சி வரை... ஆரோக்கியத்துக்கான 5 வகை எண்ணெய்க் குளியல்கள்!
எண்ணெய்க் குளியல் உடலுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதுடன் உடலின் சூட்டைக் குறைக்கும்.
"இன்றைய காலத்தில் சருமம் மற்றும் கூந்தலை மெருகேற்றவும் உடலைக் குளிர்விக்கவும் மட்டுமே எண்ணெய்க் குளியலை செய்கிறோம். ஆனால், முந்தைய காலத்தில் எண்ணைய்க் குளியல் என்பது தினசரி வழக்கத்தில் இருந்த ஒன்று. உடலுக்கு சோப்பை மட்டும் தேய்த்துக் குளிக்கும்போது, வெளிப்புற அழுக்கு மட்டுமே நீங்கும்.
ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா
தினசரி எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது உடலின் நரம்புகள் வலுவடைவது மட்டுமல்லாமல், ரத்த ஓட்டமும் சீராகும். சருமமும் கூந்தலும் மெருகேறும்" என்று சொல்லும் ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா எண்ணெய்க் குளியலின் சிறப்புகள், மற்றும் 5 விதமான எண்ணெய்க் குளியல்களின் செய்முறை மற்றும் பலன்களை விவரிக்கிறார்.
''எண்ணெய் தேய்த்துக் குளித்த பிறகு, மிதமான சூட்டில் எளிதாக செரிமானமாகும் உணவுகளை உண்ணவும். தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்ததும் கூந்தல் எண்ணெய்ப் பிசுக்குடன் ஈரமாக இருக்கும். எனவே, உறங்கும்போது தலையில் நீர் கோத்துக்கொள்ளும் வாய்ப்பிருப்பதால் கவனம்.
இந்துப்பு
எண்ணெய்க் குளியல் உடலுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதுடன் உடலின் சூட்டைக் குறைக்கும். எண்ணெய்க் குளியலுக்கு நல்லெண்ணெய்தான் சிறந்தது. மேலும், தினசரி சுத்தமான நல்லெண்ணெய்யை மிதமாகச் சூடாக்கி, அதில் இரண்டு சிட்டிகை இந்துப்பை சேர்த்துக் கலக்கி வாய் கொப்பளித்தால் பல் மற்றும் ஈறுகள் பலப்படுவதுடன் நாவின் சுவையறியும் உணர்வும் மேம்படும். முகத்தில் பொலிவு உண்டாகும்.
எண்ணெய்க் குளியலுக்கு சோப்பு பயன்படுத்தாமல் பாசிப்பயறுமாவு, கடலைமாவு அல்லது ஏதாவது ஒரு குளியல் பொடியைப் பயன்படுத்தவும்.
கடலைமாவு
தலைக்குக் குளிக்காமல் உடலுக்கு மட்டும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது அரை டீஸ்பூன் இந்துப்பு சேர்த்துக் கொள்ளவும். இது உடலில் எண்ணெய் நன்கு ஊடுருவ உதவும்.
1. எலும்புகள் வலுவடைய...
சுத்தமான நல்லெண்ணெய் 50 மில்லி எடுத்து மிதமாகச் சூடுபடுத்திக்கொள்ளவும். இந்த எண்ணெய்யைத் தலை முதல் கால்வரை சூடுபறக்கத் தேய்த்து உடனடியாகவோ, அரைமணி நேரம் ஊறவைத்தோ குளிக்கலாம்.
மூட்டுவலி நீங்க
தினசரி நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் எலும்புகள் வலுவடையும், தசைகளில் தொய்வு ஏற்படாமல் எப்போதும் இறுக்கமாக இருக்கும். சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் காத்து பொலிவைத் தரும். வாழ்நாள் முழுவதும் மூட்டுவலி ஏற்படாது.
2. உடல்வலி நீங்க...
50 மில்லி சுத்தமான நல்லெண்ணெய்யில் 3 முதல் 4 பல் பூண்டு மற்றும் 4, 5 மிளகு சேர்த்து சூடுபடுத்திக்கொள்ளவும். இந்த எண்ணெய்யைத் தலை தவிர்த்து உடல்முழுக்க சூடுபறக்கத் தேய்க்கவும்.
பிறகு, வெந்நீரில் நொச்சி இலை, நீலகிரி தைலம், சிறிதளவு கற்பூரம் இவற்றில் ஏதாவது ஒன்றைச் சேர்த்து முகம் முதல் மார்புவரை ஆவி பிடிக்கவும்.
எண்ணெய் குளியல்
இந்த எண்ணெய்க் குளியல் உடல்வலி மற்றும் சோம்பலை நீக்கி புத்துணர்வைத் தருவதுடன், இதில் கலந்துள்ள பூண்டு கபத்தைக் கரைக்கும்.
3. கண்ணெரிச்சல் நீங்க...
நல்லெண்ணெய் 100 மில்லி மற்றும் நிழலில் உலர்த்திப் பொடித்த செப்பருத்தி இலைப்பொடி ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். கிண்ணத்தில் நல்லெண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்தவும். இறக்குவதற்கு ஒரு நிமிடம் முன்பு, செம்பருத்தி இலைப் பொடியைப் போட்டுக் கலக்கவும்.
கண்ணெரிச்சல் நீங்க
இந்த எண்ணெய்யைத் தலை முதல் கால்வரை சூடுபறக்கத் தேய்த்துக் குளித்தால், எந்நேரமும் கணினியைப் பார்ப்பதால் ஏற்படும் கண்ணெரிச்சல் நீங்கும்; அதிக நேரம் வேலை செய்வதால் ஏற்படும் உடல் சூடு, சூட்டுக் கொப்புளங்கள் போன்றவற்றை குணப்படுத்தும்; கூந்தலையும் பளபளக்கச் செய்யும்.
4. சரும வறட்சி, பாதவெடிப்பு நீங்க...
நல்லெண்ணெய் மற்றும் நெய் தலா 50 மில்லி எடுத்து, அதில் ஒன்று, இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து மிதமாகச் சூடுபடுத்தவும்.
இதை தலை முதல் பாதம்வரை, குறிப்பாக உடலில் அதிகளவு வறண்டிருக்கும் பகுதிகளில் நன்கு தேய்த்து அரைமணி நேரம் ஊற வைத்துக் குளிக்கவும்.
பாதவெடிப்பு நீங்க
தேங்காய் எண்ணெய், அதிக வறட்சியால் பாத வெடிப்பில் ஏற்படும் புண்களைக் குணமாக்கும். நல்லெண்ணெய் சருமத்துக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும். தொடர்ந்து செய்துவரும் பட்சத்தில் இதில் கலந்துள்ள நெய், நுனிமுடிப் பிளவை போக்குவதுடன் பொடுகை நீக்கும்.
5. உடல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க...
50 மில்லி நல்லெண்ணெய்யுடன், ஒரு கைப்பிடி நிழலில் உலர்த்திக் காய வைத்த வேப்பிலையைச் சேர்த்து 3 முதல் 5 நிமிடங்கள் சூடுபடுத்தவும். இதை தலை முதல் கால்வரை சூடுபறக்கத் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைத்துக் குளிக்கவும்.

No comments:
Post a Comment