தமிழகத்தில் அவசர உதவி எண்ணுடன் மாற்று திறனாளிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு அறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைப் போல தங்களை முழுமையாக தனிமைப்படுத்த முடியாது, ஏனென்றால் அன்றாட சுய பாதுகாப்பு பணிகளைச் செய்ய அவர்களுக்கு மற்றவர்களிடமிருந்து வழக்கமான உதவி தேவைப்படுகிறது.
மேலும், மளிகைப் பொருள்களை வைப்பது சில ஊனமுற்றோருக்குச் செய்வது கடினம். மேலும் அவர்கள் போக்குவரத்துக்கு மற்றவர்களை நம்பியிருக்கிறார்கள்.இவ்வாறு இருக்கக்கூடிய நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா தொற்றுநோய் பரவுதலில் இருந்து தப்பித்துக் கொள்ள அனைவரும் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது. இது இயல்பான மனிதர்களுக்கு எளிதாக இருக்கும். ஆனால் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் என்ன செய்ய முடியும்? கைகளை எங்கும் தொடாதீர்கள், பிறருக்கு கை கொடுக்காதீர்கள் என கூறும் நிலையில் அவர்களுக்கு கைகள் தான் கண்களுக்கு மாற்றாக செயல்படுகின்றன.
இதற்காக சென்னை கே கே நகரில் மாற்று திறனாளிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு அறை அவசர உதவி எண்ணுடன் அமைக்கப்பட்டுள்ளது. வாய் பேச முடியாத காது கேளாதோர் அந்த கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்தால் அவர்களுக்கு பதில் சொல்ல sign language interpretor இருக்கின்றனர்.மேலும் வீடியோ கால் மூலமாக அழைப்பவர்களுக்கு ஊரடங்கு நேரத்தில் என்னென்ன அரசு அறிவிப்புகள், கொரோனா விழிப்புணர்வு செய்தி போன்றவை sign language interpretor ரூத் எபினேசன் பதில் அளிக்கிறார். இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு அறை 24மணி நேரமும் பயன்பாட்டில் உள்ளது.
வீடியோ கால் மூலமாக அழைப்பவர்கள் 9700799993 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மற்ற மாற்றுத்திறனாளின் நண்பர்கள் டோல் ஃப்ரீ எண்ணான 18004250111 எண்ணிற்கும் அழைக்கலாம்.
தினமும் 1000-1500 தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அதில் 50-70 அழைப்புகள் வாய் பேச முடியாத காது கேளாதோர்களாக இருக்கின்றனர். மேலும் கண் தெரியாதவர்களுக்கு அவர்களுக்கு உதவி புரிபவர்களாக இருப்பவர்கள் வீடியோகால் மூலம் என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களிடம் கேட்டு அறிந்து அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணையர் ஜானிடாம் அனைத்து மாற்றுத்திறனாளி அமைப்புகளும் தங்களுக்கென்று அவசரகால குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு அதை தங்களது உறுப்பினர்கள் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார்.
No comments:
Post a Comment