Fact Check: தமிழகத்திற்கு துணை ராணுவப் படை வர உள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல - KALVISEITHI | கல்விச்செய்தி

Monday, 30 March 2020

Fact Check: தமிழகத்திற்கு துணை ராணுவப் படை வர உள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மேலும் தீவிரமாக நடைமுறைப்படுத்த தமிழகத்திற்கு துணை ராணுவப்படை வரவுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை .

கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், போலீசாரின் கண்காணிப்பையும் மீறி பலர் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழகத்திற்கு துணை ராணுவப்படை வரவுள்ளதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

அவர்களுடன் முன்னாள் படை வீரர்கள், என்.சி.சி. படையினரும் களமிறக்கப்படுவதாக தகவல் வெளியானது. மேலும், அவசரநிலை பிறப்பிக்கப்படும் என்றும் செய்தி வெளியானது.இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய ராணுவம், சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவலில் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

Join Our Telegram Group