கல் உப்பை வைத்தே எப்படி செடிகளில் உள்ள பூச்சி, களைகளை விரட்டலாம்? - KALVISEITHI | கல்விச்செய்தி

Sunday, 29 March 2020

கல் உப்பை வைத்தே எப்படி செடிகளில் உள்ள பூச்சி, களைகளை விரட்டலாம்?

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here
கல் உப்பை வைத்தே எப்படி செடிகளில் உள்ள பூச்சி, களைகளை விரட்டலாம்?

வீட்டில் வளர்க்கும் செடிகளில் தேவையில்லாத பூச்சிகள், களை செடிகள் அண்டாமல் இருக்க கெமிக்கல் இல்லாத எளிமையான இயற்கை முறை உரங்கள் செய்யும் முறை இதோ...
​தோட்டப் பராமரிப்பு


பெரும்பாலும் நம் அனைவருக்கும் தோட்டம் வைக்க வேண்டும் விதவிதமான பூக்கள் அல்லது பழங்கள் மற்றும் காய்கறி செடிகளை நடவேண்டும். அவற்றை வளர்க்க வேண்டும். அதிலிருந்து கிடைக்கக் கூடிய காய்களையும் பழங்களையும் நமது சமையல்களில் சேர்த்து கலப்படமில்லாத சுத்தமான ஆர்கானிக் முறையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் இடம் இல்லாத பிரச்சனைகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் போன்றவர்கள் இதேபோல் செய்ய முடியாமல் இருக்கின்றது. ஆனால் பலரும் இடமிருந்து வேலைகளின் காரணமாக இதுபோன்ற செடிகள் வளர்க்கும் ஆசையை கடைசி வரைக்கும் நிறைவேற்றாமல் இருக்கின்றார்கள். ஆனால் தோட்டம் வைத்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும், விதை போட்ட உடனேயே செடிகள் முளைத்து அதில் இருந்து காய்கறிகள் பழங்கள் கிடைத்துவிடாது என்று அதை சரியான முறையில் பராமரித்தல் என்பது மிகவும் முக்கியம்.

இதுல உங்களுக்கு எந்த இடத்துல வலிச்சா என்ன பிரச்சினைனு தெரிஞ்சிக்கங்க..
​வீட்டுத் தோட்டம்


காய்கறிகளையும் தோட்டங்களையும் பராமரிப்பது, பூச்செடிகளை போன்று அவ்வளவு எளிதான காரியமல்ல. காய்கறிச் செடிகளுக்கு அதிகமான பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக காய்கறி செடியின் அருகே வளரக்கூடிய காட்டுச் செடிகள் அதுவும் முக்கியமாக விஷச் செடிகள் அவற்றை நாம் கண்டுகொண்டு அழித்துவிடவேண்டும். சில முறை நம் காய்கறி செடிகளை விட வேகமாக இந்த காட்டுச் செடிகள் வளர்ந்து விடும். காட்டுச் செடிகள் வேகமாக வளர்ந்தாலும் பரவாயில்லை காய்கறி செடிகளுக்கு கிடைக்க வேண்டிய அத்தனை உரங்களையும் ஊட்டச்சத்துக்களையும் காட்டுச் செடிகள் பறித்துக்கொண்டு நன்கு செழிப்பாக வளரும். காட்டுச் செடிகள், விஷச்செடி களாகவும் இருப்பதால் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் கடித்துவிட்டால் பல பிரச்சனைகளுக்கு உண்டாகும்.

சிறுநீரக கல் முதல் தலை வழுக்கை வரை எல்லா பிரச்சினைக்கும் தீர்வு தரும் கோபுரந்தாங்கி மூலிகை...

கிட்டத்தட்ட உலகத்தில் 25 லட்சம் செடி வகைகள் இருக்கின்றன. அதில் கிட்டத்தட்ட எண்பதாயிரம் வகை செடிகள் காட்டுச் செடிகள் ஆகவும் எதற்கும் பிரயோசனம் இல்லாத செடிகளாக மட்டுமே இருக்கின்றது என்று கண்டுபிடித்துள்ளனர். நாம் வளர்க்கின்ற காய்கறி செடிகளை விட்டு விட்டு விஷச் செடிகளை மட்டுமே அழிப்பதற்கு பல இயற்கை வழிமுறைகள் இருக்கின்றன. பெரும்பாலும் பூச்சி மருந்து அடிப்பதற்கு பலரும் யோசனை சொல்வார்கள் அது நம் காய்கறிச் செடிகளையும் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே காட்டு செடிகளை அழிக்க சில எளிய முறைகள்.
​வினிகர்


ஒரு பாத்திரத்தில் வினிகர் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு திரவ நிலையில் உள்ள பாத்திரம் தேய்க்க கூடிய திரவத்தை எடுத்துக்கொள்ளவேண்டும். பின்பு உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இருக்கக்கூடிய வினிகரில் 2 டேபிள் ஸ்பூன் அளவு பாத்திரம் தேய்க்கும் திரவத்தை ஊற்ற வேண்டும் பின்பு ஒரு கப் உப்பு அதில் ஊற்றவேண்டும். இவை மூன்றையும் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். ஒரு திரவம் போல் அது ஆகும்வரை கலக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்ப்ரே பண்ணக்கூடிய பாட்டிலை வாங்கிக் கொள்ளவேண்டும். அந்த பாட்டிலில் நீங்கள் தயாரித்திருக்கும் திரவத்தை ஊற்ற வேண்டும்.

சைனஸ் பிரச்னையால வருஷக்கணக்குல அவதிப்படறீங்களா?... மொதல்ல இத செய்ங்கப்பா...

பின்பு காட்டுச் செடிகள் முளைத்து இருக்கும் இடங்களில் மேல் முடிந்தவரை இந்த திரவத்தை ஸ்பிரே செய்ய வேண்டும். காட்டுச் செடிகள் இல்லாவிட்டாலும் உங்கள் காய்கறி செடிகள் இருக்கும் அருகினில் இந்த திரவத்தை தெளிக்க வேண்டும் இப்படி தெளித்து வருவதினால் மேற்கொண்டு காட்டுச் செடிகள் வளராமலும் தடுக்கலாம். இந்தத் திரவமானது கெமிக்கல் திரவத்தைக் போன்று உடனடியாக செயல்படாது இதை தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் நாம் செய்தால் நிச்சயமாக காட்டுச் செடிகள் முளைக்காமல் தடுக்கலாம். அல்லது முளைத்த காட்டுச் செடியை அழித்துவிடலாம்.
​கல் உப்பு


ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கப் உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த பின்பு அதை ஸ்பிரே பாட்டிலில் போட்டு, காட்டுச் செடிகள் முளைத்த இடங்களில் ஸ்பிரே செய்ய வேண்டும்.

எப்பவாச்சும் முகம் மரத்துப் போயிருக்கா உங்களுக்கு... அப்படி ஆனா உடனே இத செய்ங்க சரியாகிடும்...

இதுபோல் தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் காட்டுச் செடிகள் முற்றிலுமாக அழிந்துவிடும். இதையும் செடிகள் முளைக்க விட்டாலும் செடிகள் முளைக்கக் கூடாது என்று நினைக்கக் கூடய இடங்களிலும் தெளிக்கலாம். அப்படி தெரிவித்தால் காட்டுச் செடிகள் முளைப்பதை தடுக்க முடியும். முடிந்தவரை செடிகள் சிறிதாக இருக்கும்போதே இதுபோன்று செய்வது நல்லது. மிகப் பெரிதாக வளர்ந்து விட்டால் அவ்வளவு எளிதில் செடிகளை அளிப்பது கஷ்டமான காரியமாக இருக்கும்.
​எலுமிச்சை


ஒரு பாத்திரத்தில் அரை எலுமிச்சை பழத்தை பிழிய வேண்டும். திரவ நிலையில் உள்ள பாத்திரம் கழுவும் திரவத்தை ஒன்றரை டேபிள் ஸ்பூன் ஊற்ற வேண்டும். பின்பு ஒரு கப் தண்ணீரை ஊற்றவேண்டும். மூன்றையும் நன்றாக கலக்கவேண்டும். பின்பு அதை ஸ்பிரே பாட்டிலில் ஊற்ற வேண்டும். நன்கு கலக்கிய பின் காட்டுச் செடிகள் வளர்ந்து இருக்கும் இடங்களில் தெளிக்கவேண்டும். காய்கறி செடி அருகில் இருந்தால் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்காய்கறி செடிகள் மேல் படாமல் கவனமாக காட்டுச் செடியின் மேல் படும்படி தெளிக்க வேண்டும். முடிந்தவரை செடிகள் சிறிதாக இருக்கும் பொழுதே இந்த முறையை பயன்படுத்துவது செடிகளை அழிப்பதற்கு எளிதாக இருக்கும். செடிகளை மிகவும் பெரிதாக வளர்ந்து விட்டால் அதை அழிப்பது கஷ்டமாக மாறிவிடும்.
​எப்படி இது வேலை செய்யும்?


மேலே குறிப்பிட்ட மூன்று முறைகளும் பெரிய அளவில் கெமிக்கல் இல்லாத கலவையாகும். எனவே உங்கள் கைகளில் பட்டாலோ அதனால் உங்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது. இந்த கலவைகளை காட்டுச் செடிகள் மேல் தெளிக்கும் முன்பு, முக்கியமாக சூரிய வெளிச்சம் நன்றாக இருக்கும் நாட்களாக பார்த்துக்கொள்ள வேண்டும். மழை நாட்களில் இதுபோன்று காரியங்களில் ஈடுபட்டால், பெரிய அளவில் எந்த மாறுதலும் கிடைக்காது. சூரிய உஷ்ணம் அதிகமாக இருக்கும் நாட்களில் இந்த முறையை நாம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் இதை செய்யும்போது காட்டுச் செடிகள் காய்ந்து போக மிகவும் எளிதாக வாய்ப்பு கிடைக்கும்.மழை நேரங்களில் இது செய்தால் நாம் அடித்து இருக்கும் அந்த கலவையை தண்ணீர் கழுவி விடும்.

கணைய அழற்சி இருக்கா உங்களுக்கு?... இதோ இந்த இயற்கை வைத்தியத்த ட்ரை பண்ணுங்க... சீக்கிரம் சரியாகிடும்...

செடியின் மேல் பெரிதாக எந்த பாதிப்பும் நிகழாது. மேலும் இந்த கலவையை செடிகளில் தெளிப்பதற்கு முன்பு பக்கத்தில் உள்ள காய்கறி செடிகள் மீது படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் செடிகள் முளைப்பதற்கு முன்பே காய்கறி செடிகள் அருகே தெளிக்கும் பொழுது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் இதை நேரடியாக காய்கறி செடியின் அருகே மண்ணில் தெளிக்கும் பொழுது, அந்த மண் கலவை ஆனது உங்கள் காய்கறி செடியின் மேல் பட்டுவிட்டால் உங்கள் காய்கறி செடிகள் வாடிவிடும். மேலும் அந்த மண் கலவையில் இனிமேல் எந்த செடியும் பெரிதாக வளர வாய்ப்புகள் குறைந்துவிடும். முடிந்தவரை காட்டுச் செடிகளின் மேல் மட்டுமே படுமாறு இந்த கலவையை தெளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group