"ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது - அமைச்சர் தகவல்
நாடு முழுவதும் வரும் ஜூன் மாதம் முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு மாதத்திற்கு அமல்படுத்தப்பட்ட ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் வெற்றிகரமாக அமைந்ததால் தமிழகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையில் "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவிருந்த "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு" திட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் தற்போதைக்கு இத்திட்டம் சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment