Join Our KalviSeithi Telegram Group - Click Here
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தற்போது அலுவலகப்பணியாளர், அலுவலக உதவியாளர், பெருக்குபவர், இரவுக்காவலர் உள்ளிட்ட எந்த பணியிடமும் புதிதாக பணியிட ஆணை வழங்கப்படவில்லை.
எனவே, எவரேனும் நியமன ஆணையுடன் பணியில் சேர வருகைபுரிந்தால் பணியில் சேர அனுமதிக்க வேண்டாம் எனவும், அருகில் உள்ள காவல் நிலையில் FIR பதிவு செய்யவும், விவரத்தினை உடனடியாக வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தெரிவிக்கும்படி கோருதல்
/தனிகவனம்/
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கவனத்திற்கு,
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தற்போது அலுவலகப்பணியாளர், அலுவலக உதவியாளர், பெருக்குபவர், இரவுக்காவலர் உள்ளிட்ட எந்த பணியிடமும் புதிதாக பணியிட ஆணை வழங்கப்படவில்லை.
எனவே, எவரேனும் நியமன ஆணையுடன் பணியில் சேர வருகைபுரிந்தால் பணியில் சேர அனுமதிக்க வேண்டாம் எனவும், அருகில் உள்ள காவல் நிலையில் FIR பதிவு செய்யவும், விவரத்தினை உடனடியாக வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தெரிவிக்கும்படியும் அனைத்து அரசு/ நகரவை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எவரேனும் பணியில் சேர அனுமதிக்கப்பட்டால் சார்ந்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
Monday, 30 March 2020
Home
Unlabelled
போலி நியமன ஆணை - FIR பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு !!
போலி நியமன ஆணை - FIR பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment