யாருக்கெல்லாம் வெளியூர் செல்ல அனுமதி?
*குடும்ப உறுப்பினர்களான, அண்ணன், அக்கா, தங்கை, மனைவி; நோய் வாய்ப்பட்டு தனியாக இருக்கும், தாத்தா, பாட்டி ஆகியோரின் மருத்துவம் தொடர்பாக செல்லவும், மனைவியின் பிரசவம்தொடர்பாக செல்லவும், அனுமதி சீட்டு வழங்கப்படும். *வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில், துணை ஏதும் இல்லாமல் தனியாக வசிக்கும், ரத்த சம்பந்தமான முதியோர்களையும், நோய் வாய்ப்பட்ட பெற்றோரை அழைத்து வரவும், அனுமதி வழங்கப்படும். *பெற்றோரை விட்டு, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில்,உறவினர்களிடம் இருக்கும், இரண்டரை வயது மகன், மகளை அழைத்து வர, அனுமதி வழங்கப்படும்
*கோரிக்கை கடிதங்களை, சந்திக்க விரும்பும் நபர்களின், தேவையான அடையாள ஆவணங்களுடன், சென்னை, வேப்பேரியில் உள்ள, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் *மேலும், 75300 01100 என்ற, மொபைல் போன் எண்ணுக்கு, குறுஞ்செய்தியாகவும், 'வாட்ஸ் ஆப்' செயலி வாயிலாக, கோரிக்கை கடிதம் மற்றும் அடையாள ஆவணங்களை சமர்ப்பித்தும், அனுமதி சீட்டு கோரலாம். gcpcorona2020@gmail.com என்ற, மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம் *கோரிக்கை கடிதங்களில் உள்ள தகவல்களை ஆய்வு செய்து, உண்மையாக இருந்தால் மட்டுமே, அனுமதி சீட்டு வழங்கப்படும்.
No comments:
Post a Comment